ஹலோ யார் பேசறது! சட்டசபைக்குள் திமுக எம்எல்ஏ அட்டகாசம்!

0
109

சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவருடைய அமைச்சரவை சகாக்களும் அவரும் கடந்த 7ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார்கள் ஸ்டாலின் தமிழகத்தின் 16வது முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து 16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்றையதினம் தொடங்கியது.

அந்த சமயத்தில் தேர்தலில் வெற்றியடைந்த சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள், சட்டசபை உறுப்பினர்கள் எல்லோருக்கும் தற்காலிகமான சபாநாயகர் பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.இப்படியான சூழ்நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த ஒரு சட்டசபை உறுப்பினர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சட்டசபை உறுப்பினர்கள் எல்லோரும் சட்டசபைக்குள் கைபேசியை பயன்படுத்தக் கூடாது என்ற காரணத்தால், சட்டசபைக்கு வெளியே இருக்கின்ற பெட்டகத்தில் செல்போனை வைத்து விட்டு செல்வார்கள்.

அப்படி இருக்கையில் மன்னார்குடி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சட்டசபை உறுப்பினர் டிஆர்பி ராஜா விதிகளை மீறி சட்டப்பேரவைக்குள் செல்போனில் உரையாற்றி இருப்பது சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இதற்கு முன்னரே கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபையில் கைபேசியில் காணொளி எடுத்ததால் டிஆர்பி ராஜாவின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு பத்து தினங்கள் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleஒரு உபயோகப்படுத்தப்பட்ட ஷு-வின் விலை இத்தனை கோடியா?
Next articleதமிழகத்தில் 69 சதவிகித இட ஒதிக்கீடு காப்பாற்றப்படும்! அமைச்சர் உறுதி!