திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட பெருமாள்பட்டு ஊராட்சியில் அதிமுகவின் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் என்பவர் இன்று காலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட ரூபாய் 2000 பணம் சரியாக வழங்கப்படுகிறதா என்று சோதனை செய்வதற்காக நியாயவிலை கடைக்கு வருகை தந்திருக்கிறார்.
பெருமாள்பட்டு ஓம்சக்தி நகர் நியாயவிலை கடைக்கு அவர் வருகை தந்த சமயத்தில் அந்த பகுதியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சீனிவாசனிடம் தகராறு செய்திருக்கிறார்கள். அவர் நான் ஊராட்சி மன்ற தலைவர் என்ற விதத்தில் ஆய்வு செய்ய வந்திருக்கிறேன் என்று விளக்கம் கூறியும் அவர்கள் அதனை காதில் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
சீனிவாசன் தன்னந்தனியாக வந்ததன் காரணமாக, அங்கே இருந்த திமுகவினர் திடீரென்று ஒன்றுகூடி சீனிவாசனை அடித்திருக்கிறார்கள் இதனைத்தொடர்ந்து இந்த தகவல் எவ்வாறோ அதிமுகவை சார்ந்தவர்களுக்கு போய் சேர அவர்களும் அந்தப் பகுதிக்கு வந்து விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
கூட்டம் கூடியதை பார்த்ததும் திராவிடர் முன்னேற்றக் கழகத்தினர் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இந்த நிலையில், அதிமுகவின் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் அங்கே இருக்கின்ற காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.