ரயில்வே துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
234
Sudden announcement issued by the Railway Department! Shocked public!
Sudden announcement issued by the Railway Department! Shocked public!

ரயில்வே துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

கொரோனா தொற்றானது மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இந்த கொரோனாவின் 2வது அலை இந்தியாவை பெருமளவு பாத்தித்துள்ளது.இந்த 2-ம் அலையானது சுனாமி போல அதி வேகத்தில் பரவி வருகிறது.இதனால் பல உயிர்களை இழந்து வருகிறோம்.மக்களின் நலனுக்காக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் பலவேறு நாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜனை இறக்குமதி செய்து  வருகின்றனர்.

மருத்துவத்திற்கென்று மத்திய அரசும் ஒவ்வொர் மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி கொடுத்துள்ளது.தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் தமிழ்நாட்டில் முதலில் சில தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தியும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியா நிலையில் தற்போது முழு ஊரடங்கை செயல்படுத்தியுள்ளனர்.பேருந்துகள் செயல்படாது,காய்கறிக்கடைகள் இதர அத்தியாவசிய கடைகள் அனைத்தும் கலை 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி என்றெல்லாம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சிறப்பு ரயில்கள் அத்தியாவசிய தேவைக்காக இயக்கப்பட்டு வந்தது.தற்போது முழு ஊரடங்கை அமல்படுத்திய நிலையில் மக்கள் சாலைகளில் நடமாடுவதும்,இரயில் நிலையங்களில் நடமாடுவதும் குறைந்து  காணப்படுகிறது.அதனால் சிறப்பு இரயில்கள் அனத்தும் தற்காலிகமாக செயல்படுவதை நிறுத்தியுள்ளனர்.அந்தவகையில் பூனலூரிலிருந்து குருவாயூர்,குருவாயுரிளிருந்து பூனலூர் செல்லும் இரயில்கள் தற்காலிகமாக இயங்க தடை செய்துள்ளனர்.

திருவனந்தபுரமிலிருந்து குருவாயூர்,சென்னை எழும்பூரிலிருந்து திருச்செந்தூர்,சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் to மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் இயங்கிய சிறப்பு இரயில்கள் நாளை (31.05.2021) முதல் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

Previous articleமோடிக்கு அறிவுரை கூறிய முதல்வர்! என்ன கூறினார் தெரியுமா?    
Next articleசொந்த காதலியை 25 பேர் கற்பழிப்பதை பார்த்து ரசித்த காதலன்! கொடூரத்தின் உச்ச கட்டம்!