உத்திரபிரதேச மாநிலம் காசிபூரில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் 40 வயது மதிக்கத்தக்க முன்ஷிசிங் யாதவ் என்பவர் தன்னுடைய மனைவி நிஷாதேவி அவருடைய மகன்கள் கிருஷ்ணா மற்றும் ஷ்யாம் மற்றும் மகள் சுதா உள்ளிட்டோருடன் வசித்து வந்திருக்கிறார். இவ்வாறான சூழ்நிலையில், அந்த தலைமை காவலர் முன்ஷி சிங் யாதவ் அவர்களுக்கு தோல்வியாதி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருடைய வீட்டில் இருப்பவர்களே அவரை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். மனைவி மற்றும் குழந்தைகள் கூட அவரை தொடுவதற்கு பயந்து போய் இருந்தார்கள்.
இதன் காரணமாக, கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளானார் அந்த நபர் இதனால் சென்ற வாரம் சனிக்கிழமை அன்று வீட்டில் இருக்கின்ற ஒரு கூரையின் அருகில் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென்று எழுந்து கொண்ட அந்த நபர் அங்கே இருந்த ஒரு கத்தியால் அவருடைய மனைவி முதலில் வெட்டி கொலை செய்திருக்கிறார். அதன் பின்னர் அவரின் குழந்தைகளை தாக்கியிருக்கிறார் இந்த தாக்குதலில் அவருடைய மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிள்ளைகள் கடுமையான காயத்துடன் உயிர் தப்பியிருக்கிறார் இதன்பின்னர் அந்த நபர் அங்கு இருக்கின்ற தொடர்வண்டியின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக இறந்துபோன யாதவ் அவர்களின் சகோதரர் காவல்துறையில் புகார் தெரிவித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.