நீதிபதிக்கும் இந்த நிலையா? மக்கள் அதிர்ச்சி!
கொரோனா பாதிப்பு பல எல்லைகளை கடந்து அனைத்து மக்களிடமும், அனைத்து துறையை சார்ந்தவர்களையும் என பல உயிர்களை பகுபாடில்லாமல் பலி எடுத்து வருகிறது.
இந்த கொரோனா வைரஸ்க்க்கு யாரும் விதிவிலக்கு அல்ல என்பது போல் திரைத்துறையிலும், அரசியலிலும் பல்வேறு முக்கியமான நபர்களை நாம் தவற விட்டு விட்டோம்.முன்கள பணியாளர்கள் உட்பட பலர் தம் உயிரை பணயம் வைக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் நீஷ் (வயது47). நீதிபதியான இவர் மதுரை ஐகோர்ட்டில் பணிபுரிந்து பின்னர் வள்ளியூர் கோர்ட்டில் வேலை பார்த்தார்.
கடந்த மாதம் 5ம் தேதி நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில், நீஷ் தலைமை நீதிபதியாக பணி அமர்த்தப்பட்டார்.இந்த நிலையில் பணியில் சேர்ந்து சில நாட்களிலேயே உடல்நலக்குறைவினால் மதுரை மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, அதை தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் வசதி தேவைப்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப் பட்டது, இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அவர் உயிர் இழந்தார்.