நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்!

0
123

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்!

ஒரு பைசா செலவில்லாமல் நாள்பட்ட இடுப்பு வலியை சரியாக்க கூடிய இயற்கையான மருத்துவத்தைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பெண்களுக்கு இடுப்பு வலி கழுத்து வலி ஆகியவை இருக்கின்றன. அப்படி பெண்களுக்கு வரக்கூடிய வலிகளை நீக்கும் அற்புதமான இயற்கை வைத்தியம். இதை ஆண் பெண் இருவரும் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

1. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர்

2. அரை ஸ்பூன் நல்லெண்ணெய்

3. சீரகப் பொடி கால் டீஸ்பூன்

4. உப்பு

செய்முறை:

1. அரிசி வடித்த கஞ்சி தண்ணீரை நாம் கீழே ஊற்றி விடுவோம் இல்லை மாடுக்கு வைத்து விடுவோம், ஆனால் அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன.

2. அரிசி வேக வைத்து வடித்த கஞ்சி தண்ணீரில் ஒரு டம்ளர் எடுத்துக் கொள்ளவும்.

3. இதில் அரை டீஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெயை ஊற்றி கொள்ளவும்.

4. சீரகத்தை வறுத்து பொடி செய்து கால் டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளவும்.

5. இதனை நன்றாக கலந்து பருகலாம்.

6. சுவைக்காக உப்பு சேர்த்து கொள்ளலாம்.

இதை எப்பொழுது வேண்டுமானாலும் பருகலாம். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலியை கூட சரி செய்யும் தன்மை கொண்டது. மேலும் சீரகப்பொடி சேர்ப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து உடல் எடையை குறைக்க செய்யும். மேலும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.

கண்டிப்பாக இதனை பயன்படுத்தி பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு இருக்கும் இடுப்பு வலி மறைந்து போகும்.

author avatar
Kowsalya