சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி அவர் அமைச்சராக இருந்த போதிலும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார்.பல இடங்களில் இவரது பேச்சு சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. பல அரசியல் கட்சி தலைவர்களை மிகக் கடுமையாக அருவருக்கத்தக்க வார்த்தைகளில் கூட இவர் விமர்சனம் செய்திருக்கிறார். இதனால் தமிழகம் முழுவதும் இவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பி இருக்கின்றன.
அத்துடன் இவருடைய பேச்சின் வேகம், அதன் தன்மை, போன்றவற்றை கவனித்து வந்த இணையதள வாசிகள் இவர் ஒரு கள்ளம் கபடமற்றவர் மனதில் இருப்பதை அப்படியே பேசுபவர் என்று இவரை ஒரு கதாநாயகனைப் போல பார்க்க தொடங்கினார்கள். ஆனால் அவருடைய நிலையே வேறு மாதிரி இருந்தது. அதாவது அவர் இவ்வாறு சர்ச்சுக்கு உள்ளவாறு பலவிதமான கருத்துகளை தெரிவித்து அதன் விளைவாக விருதுநகர் மாவட்ட செயலாளர் என்ற பதவியை அதிமுக தலைமை பறித்தது அதற்கு காரணம் பல இடங்களில் இவர் ஒரு அமைச்சர் என்ற போதிலும் பொறுப்பில்லாமல் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார் என்பது தான் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திராவிடர் முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது ஆகவே தற்சமயம் அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது அவருடைய பதவிக் காலத்தில் பல ஊழல்கள் பல குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்து வந்திருக்கிறார்கள். ஆனால் அதிமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தற்சமயம் ஆவின் பாலகத்தில் பணிபுரியும் ஊழல் செய்யும் அதிகாரிகளை நீக்கினால் மட்டுமே அரசு இழப்பீட்டை சரிசெய்ய இயலும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் சங்க தலைவர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தொழிலாளர் அணி மாநில செயலாளராக இருந்து வரும் பொன்னுசாமி பால்வளத்துறை அமைச்சர் எம்.எஸ் நாசர் அவர்களை நேரில் சந்தித்து ஊழல் செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து கோரிக்கை மனுவை வழங்கியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொன்னுசாமி, அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி மற்றும் அவருடைய பினாமிகள் ஆவின் பாலகத்தில் மொத்தம் 300 கோடி ரூபாய் அளவில் ஊழல் செய்து இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்களை தற்சமயம் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் நாசரிடம் வழங்கி இருப்பதாகவும், தெரிவித்திருக்கிறார். அதோடு ஆவின் பாலகத்தில் பணிபுரியும் ஊழல் அதிகாரிகளை நீக்கினால்தான் இழப்பீடுகளை சரி செய்ய இயலும் என்று தெரிவித்து இருக்கிறேன் என அவர் கூறியிருக்கிறார்.
அதோடு தமிழ் நாட்டில் பல மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பால் முகவர்கள் மற்றும் பால்வளத்துறை தொழிலாளர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி இறந்து போயிருக்கிறார்கள். ஆனாலும்கூட எங்களுடைய பணியை நாங்கள் தொடர்ச்சியாக செய்து வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக, பால் முகவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் குடும்ப பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் வைத்து எல்லோரையும் நோய் தொற்று தடுப்பு முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர் அமைச்சர் பதவியில் இருந்த சமயத்தில் டிடிவி தினகரன், ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் அருவருக்கத் தக்க விதத்தில் விமர்சனம் செய்திருக்கிறார். அதற்கான பலனை அவர் விரைவில் அனுபவிப்பார் என்று தெரிகிறது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர் பேசியது சரியல்ல அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று ஒருவேளை அதிமுக ஒதுங்கி கொண்டால் அவரின் கதி என்னவென்று தெரியாமல் போய்விடும். ஒருவேளை அதிமுக அவருக்கு துணை நின்றால் அவர் சற்று ஆறுதல் அடைவார். இருந்தாலும் தற்சமயம் இருக்கும் சூழலில் அதிமுக அவர் பக்கம் இருக்குமா அல்லது அவரைக் கைவிட்டு தன் வேலையை பார்த்துக் கொண்டு செல்லுமா என்பதுதான் தற்போது ராஜேந்திர பாலாஜியின் என்ன ஓட்டமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.