மேட்டூர் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

0
181

மேட்டூரில் இயங்கிவரும் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

மேட்டூர் அனல் மின் நிலையம் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்கு அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

 

மேட்டூர் அனல் மின் நிலையம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட 240 மெகாவாட் கொண்ட நான்கு அலகுகளும் அதேபோல் 600 மெகாவாட் கொண்ட மற்றொரு பிரிவு இயங்கி வருகிறது.

 

இந்த இரு பிரிவுகளும் மூலமும் 1440 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி செய்யப்படும். இன்று அதிகாலையில் 840 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் கன்வேயர் பெல்ட் பகுதியில் உராய்வு ஏற்பட்டதன் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

தீ மளமளவென பரவியதால் அனல் மின் நிலையத்தில் உள்ள தீயணைப்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

 

இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து இருக்கலாம் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு விவரமும் கிடைக்கவில்லை.

இதேபோல் 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleசென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்!
Next articleசொந்த கட்சியை விமர்சனம் செய்த பாஜக எம்எல்ஏவால் பரபரப்பு!