அய்யா நீங்க தான் காப்பாத்தனும்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு

0
238

அய்யா நீங்க தான் காப்பாத்தனும்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு

40 வருடங்களுக்கு முன்னர் நாம் மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களுடைய உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அழைத்து வருவார்கள். ஐயா நீங்கள் தான் எங்களுக்கு தெய்வம் மாதிரி நீங்கள் தான் ஐயா இந்த உயிரை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவிப்பார்கள் என்று மிகவும் உருக்கமாக தெரிவித்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.

அதோடு இப்போது இருக்கும் சூழ்நிலையில், இந்த நோய் தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த காலகட்டத்தில் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுடைய உயிரையும் துச்சமென மதித்து மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் தான் உண்மையான கடவுளாக பார்க்கப்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

அதோடு அந்த காலத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் மருத்துவம் பார்த்தால் போதுமானது சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களுக்கு எந்த விதமான ஆபத்தோ அல்லது அச்சுறுத்தலும் கிடையாது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதோடு மருத்துவ பணியாளர்கள் போன்றோருக்கும் நோய் தொற்றிக் கொள்வதற்கான அபாயம் இருந்து வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இந்த நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சமயத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் நோயினால் பாதிக்கப்பட்டு கடுமையான நோய் பாதிப்புக்கு உள்ளாகி உயிர் இழந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதோடு மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை ஏராளம் இருக்கிறார்கள். இத்தனையும் தாண்டி இந்த நோய் தொற்றினால் பாதிப்படைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் என தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

Previous articleஅமமுகவின் முக்கிய தலைவர் மறைவு! சோகத்தில் டிடிவி தினகரன்!
Next articleஆசிரியரால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here