இரண்டாவது டோஸ் போட்டாச்சா? அப்ப இதையும் தெரிஞ்சிக்கோங்க!

0
112
Second dose of potash? Find out!
Second dose of potash? Find out!

இரண்டாவது டோஸ் போட்டாச்சா? அப்ப இதையும் தெரிஞ்சிக்கோங்க!

கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையானது மிக பயங்கரமாக சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.நாளுக்கு நாள் அது பல உயிர்களை பலி கொண்டு வருகிறது.

அரசுகள் என்னதான் வழிமுறைகளை செயல்படுத்தினாலும் மக்கள் தனி நபர் இடைவெளிகளை பின்பற்றினால் மட்டுமே வைரஸ்யை அழிக்க முடியும் என்பதை மக்கள் உணரவேண்டும்.

தற்போது மருத்துவர்கள் புதுப்புது அறிகுறிகளை அடுத்தடுத்து கூறி வருகின்றனர்.மத்திய அரசு போர்கால அடிப்படையில் தடுப்பூசிகளை இரண்டு தவணைகளாக முதல் ஊசிக்கும் சிறிது இடைவெளி விட்டு இரண்டாவது ஊசியையும் போட வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் நோய் தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது.பெங்களூரிலும் பரவி வருகிறது.மாநிலம் முழுவதிலும் போலீசாருக்கும் கொரோனா தொற்று அதிகளவு பரவி வருகிறது.

பெங்களூரில் மட்டும் 1500 போலீசார் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.இந்நிலையில் பெலகாவி மாவட்டத்தில் 113 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுயுள்ளனர்.

இது குறித்து பெலகாவி நகர துணை போலீஸ் கமிஷனர் விக்ரம் அவர்கள்  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘‘பெலகாவி போலீஸ் கமிஷனர் எல்லைக்குள் பணியாற்றும் 66 போலீசார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்றும்,அவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் கொரோனா பாதித்த 66 போலீசாரின் உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கிறது’’ என்றும் அவர் கூறியுள்ளார்.

பெலகாவி டவுனில் 66 பேர், மாவட்டத்தின் பிற பகுதியில் 33 போலீசார், பெலகாவி ஆயுதப்படை போலீசார் 14 பேர் என ஒட்டு மொத்தமாக பெலகாவி மாவட்டத்தில் 113 போலீசார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், பாதிப்புக்கு உள்ளான 113 போலீசாரும், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் அந்த போலீசார் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுகொண்டதும் குறிப்பிடத்தக்கது.அதன் காரணமாகவே அவர்களை வீடு தனிமையில் வைத்துள்ளதாகவும், ஒரு சிலரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் உயா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதிலிருந்து இரண்டு டோஸ் போட்டாலும் முககவசம் அணிவதும், தனி நபர் இடைவெளி பின்பற்றுவதும் தனி நபர் கடமையாக நாம் கடைபிடிக்க வேண்டும்.எப்படியும் கொரோனா நம்மை தொடாமல் பார்த்து கொள்வோம்.

Previous articleஇ-பதிவு தேவையில்லை! காவல்துறை அதிரடி!
Next articleஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்த சர்ச்சைக்குரிய செயல்! தப்புமா அமைச்சர் பதவி!