அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்த சர்ச்சைக்குரிய செயல்! தப்புமா அமைச்சர் பதவி!

0
70

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவெறும்பூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக களம் கண்டு வெற்றி அடைந்தவர் தான் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவருக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் இப்படியான சூழலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இருக்கின்ற கட்சியின் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகர காவல் துறை ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர், உள்பட பல அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது.

இந்த விஷயத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் ஜனநாயகத்தை அவமானப்படுத்தும் ஒரு தவறான முன்னுதாரணத்தையும் உண்டாக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திருச்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக வின் செயலாளருமான பா. குமார் தமிழக ஆளுநருக்கு புகார் மனுவை அனுப்பி இருக்கிறார்.

திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுகவின் இளைஞர் அணி செயலாளராக இருந்து வரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதியின் நெருங்கிய நண்பர் உதயநிதி இளைஞர் அணியின் பக்கம் வந்ததிலிருந்து இளைஞர் அணியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் திமுகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இளைஞரணி செயலாளராக இருந்து வரும் உதயநிதியிடம் அவருக்கு தனி செல்வாக்கு இருப்பதன் காரணமாக, திமுகவை சேர்ந்த மூத்த தலைவர்களால் இவரை நெருங்க கூட முடியவில்லை என்று தெரிவிக்கிறார்கள். இப்படியான சூழலில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சென்னை திருவெறும்பூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக வெற்றியடைந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் தான் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதாவது தான் அமைச்சர் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை தன்னுடைய நண்பன் அமைச்சரவையில் இடம் பிடிக்கவேண்டும் என்று கருதியதால் அவர் தன்னுடைய தந்தையான முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் வைத்த கோரிக்கையின் பெயரிலேயே அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் இளைஞர் அணியில் உதயநிதி ஸ்டாலினின் வலதுகரமாக வலம் வருபவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதன்காரணமாக அமைச்சராக இருந்தாலும் கூட அதில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் உதயநிதி மூக்கை நுழைக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த புகார் தொடர்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் நோய்த்தொற்று பரவலை சமாளிப்பதற்கு உதவ வேண்டும் என்று தெரிவித்து திருச்சியில் செயல்பட்டு வரும் பொது நல சங்க நிர்வாகிகளுடன் என்னுடைய அலுவலகத்தில் நேற்று முன்தினம் பேசிக் கொண்டிருந்தேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அந்த சமயத்தில் புதிதாக அமைச்சராக பொறுப்பேற்ற என்னை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் என்னுடைய அலுவலகத்திற்கு வருகை தந்தார்கள் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

நோய் தொற்று காலத்தில் மக்களுடைய உயிரைப் பாதுகாக்கும் விதத்தில் சேவை மனப்பான்மை இருக்கின்ற ஒத்த கருத்துடையவர்கள் சந்தித்து ஆலோசனை செய்வது, அதில் அதிகாரிகள் பங்கேற்று சில கருத்துக்களை தெரிவிப்பது இயல்பான ஒன்று தான் என்று தெரிவித்திருக்கின்றார். மற்றபடி அந்தக் கூட்டம் திட்டமிட்டு அதிகாரிகளை வரவழைத்து நடத்தப்பட்ட கூட்டம் கிடையாது. அரசு ஊழியர் என்ற முறையில் கட்சி அலுவலகத்தில் அந்தக் கூட்டத்தை நடத்த கூடாது என்பதை நான் அறிவேன் ஒரு சில பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி போல் இது முன்னரே திட்டமிடப்பட்ட கூட்டம் கிடையாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.