நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஆய்வு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிக துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் அந்த நோய் இந்தியாவை பொருத்தவரையில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் வரும் 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு மாநிலம் முழுவதும் பிறப்பிக்கப்படுகிறது. ஆனாலும் இந்த நோய் தொற்று பாதிப்பு குறைவதை போல் தெரியவில்லை.
தினசரி பாதிப்பானது 33 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 350 தாண்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. நாட்கள் செல்லச் செல்ல இதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல் அமைச்சராக ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு நாளைய தினம் கோவை ஈரோடு சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்ய இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த பகுதிகளில் இருக்கின்ற மருத்துவமனைகளில் நோய் தொற்று சிகிச்சை ஆக்சிஜன் பயன்பாடு, படுக்கை வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதோடு மூன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.