என்ன ஆனது விஜயகாந்துக்கு வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
178

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக, இன்று அதிகாலை 3 மணி அளவில் மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டதன் விளைவாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். இந்நிலையில் அவருக்கான மருத்துவ அறிக்கை வெளியாகாததால் பலவிதமான தகவல்கள் பரவத் தொடங்கியது.

இந்தநிலையில், இன்று காலை முதலே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் மிக பரபரப்பாக உலா வந்து கொண்டிருந்தது. அவர் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பதை கடந்து அவர் அடிப்படையில் ஒரு நல்ல மனிதராக இருந்து கொண்டிருக்கிறார். அதன் விளைவாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக கேள்விப்பட்டவுடன் தமிழகம் முழுவதுமே பதறிப் போனது என்று தான் சொல்ல வேண்டும்.

அவர் என்ன தான் ஒரு அரசியல் கட்சியை வைத்து திறம்பட நடத்த இருந்தாலும் கூட அடிப்படையில் அவர் ஒரு குழந்தை உள்ளம் படைத்தவர் என்பதை தெரிந்து கொண்டவர்கள் வெகு சிலரே என்று நினைத்திருந்த சமயத்தில், இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்று செய்தி வெளியானவுடன் தமிழகம் முழுவதுமே பரபரப்பாக இருக்கிறது இதிலிருந்துதான் தமிழகம் முழுவதுமே அவரை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள இயல்கிறது.

இந்த சூழ்நிலையில், தேமுதிகவின் கட்சித் தலைமை அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வழக்கமாக மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைக்காக தான் தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்றும், உடல்நிலை அவருக்கு சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. என்றும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleமுதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் வைத்த முக்கிய கோரிக்கை!
Next articleசேலம் மக்களே உஷார்! இந்த மருத்துவமனைக்கு இனி போகாதீங்க!