சேலம் மக்களே உஷார்! இந்த மருத்துவமனைக்கு இனி போகாதீங்க!

0
92

சேலம் ஐந்து ரோடு பகுதியில் இயங்கிவரும் குறிஞ்சி மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. சேலத்தில் சுமார் 35 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிசன் படுக்கை வசதிகள் கொண்ட படுக்கைகள் உள்ளன.

 

இந்நிலையில் சேலத்தில் மிகவும் பிரதான சாலையான ஐந்து ரோடு பகுதியில் இயங்கிவரும் மிகப் பிரபலமான குறிஞ்சி மருத்துவமனையில் கொரோனாவிற்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

 

தமிழக சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் குழு மருத்துவமனையை ஆய்வு செய்தபோது அதில் குளறுபடி நடந்தது தெரியவந்துள்ளது. அது கொரோனா ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அதே போல் ஆக்சிசன் வழங்குவதிலும் ஏதோ குளறுபடி நடந்தால் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

 

இதனை அடுத்து குறிஞ்சி மருத்துவமனையில் எந்த ஒரு கொரோனா நோயாளிகளையும் சேர்க்கக்கூடாது என்று மாநில அரசு தடாலடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு முறையான மருத்துவம் செய்து முழுமையாக குணம் பெற்ற பின்னரே அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. குணமாவதற்கு முன்பே அவர்களை வீட்டிற்கு அனுப்ப கூடாது என்று அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

மேலும் இது போன்ற நிறைய வழக்குகள் அந்த மருத்துவமனையின் மேல் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.