சர்ச்சை மன்னன் நித்தியானந்தா

0
90

நித்தியானந்த என்று சொன்னாலே பல விமர்சனங்களும் புகார்களும் வந்து கொண்டே இருக்கின்றன.அவர் வெளியிடும் அறிக்கைகள்,செய்திகள் அனைத்தும் சற்று விந்தையாகவும்,வேடிக்கையாகவும் உள்ளது. உதாரணமாக அந்தரத்தில் மிதக்க வைக்கிறேன் என்றது, சூரியனை 40 நிமிடம் தாமதமாக உதிக்க சொன்னேன் என்றது.

மேலும் சக்திகளை வெளியிடுகிறேன் என்ற பெயரில் கிராபிக்ஸ் வீடியோவை வெளியிட்டது. மேட்டூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலை நான் தான் முன்ஜென்மத்தில் கட்டினேன், அதன் லிங்கம் என்னிடம் உள்ளது என்று சொல்லிவிட்டு, இப்போது மூல லிங்கம் வேறு,மூலவர் லிங்கம் வெறு என பல்டி அடிப்பது. என பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.

இவரது செயல்களால் இவரை நெட்டிசன்கள் காமெடி கதாபாத்திரமாக சித்தரித்து பல நகைச்சுவை மீம்ஸ்கள் வெளிவருகின்றன.சினிமாவிலும் நித்தியானந்தாவை  கலாய்க்கிறார்கள்.ஆனால் சாரா என்ற கனடாவை சேர்ந்த பெண் நித்தியானந்தா தனது ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளை கொடுமைபடுத்துகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூரில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் கனடாவை சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்டரி என்ற பெண் சிஷ்யையாக இருந்து வந்தார்.பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறிவிட்டார்.அவர் அங்கு இருந்த நேரத்தில் திருவனாந்தபுரத்தில் உள்ள ஆசிரமத்தில் பணி நிமித்தமாக சென்றுள்ளார். அது குறித்து அவர் பேசுகையில் “அந்த ஆசிரமத்தில் பல சிறுவர்கள் தங்கி படித்துவருகிறார்கள்.

மூன்றாவது கண்ணை திறப்பதற்காக பயிற்சி என்று பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர் “ என்றார். கழிவறைக்கு அவர்கள் சொல்லும் நேரத்தில் மட்டுமே செல்லவேண்டும்,மற்ற நேரத்தில் கழிவறைக்கு செல்லக்கூடாது,காலையில் பிரம்பால் அடித்து சிறார்களை எழுப்புகிறார்கள், ஒருவருக்கொருவர் பேசிகொள்ளகூடாது,இரும்பு கம்பிகள் நிறைந்த தனித்தனி அறைகளில் சிறைவைக்கபட்டுள்ளார்கள் என கூறினார்.இத்துடன் சாரா நித்யானந்தாவை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

author avatar
Parthipan K