நெக்ஸ்ட் சிஎம் இவர்தான்! அதிரடி காட்டும் திமுக!
தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.மக்கள் ஆவலுடன் இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவை நோக்கி காத்திருந்தனர்.ஏனென்றால் இரு மூத்த தலைவர்கள் இன்றி நடத்தும் முதல் தேர்தல் ஒரு பக்கம். இரண்டு தடவையாக ஆட்சி நடத்துபவர்கள் மீண்டும் ஆட்சி அமைப்பார்களாக அல்லது எதிர்கட்சி அமைக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.
அந்தவகையில் வாக்கு எண்ணிக்கை மே-2ஆம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே திமுக முன்னிலை வகித்து வந்தது.அதிமுக பின்னடைவையே சந்தித்தது.திமுக முன்னிலை வகித்து வந்த நிலையில் 158 இடங்களில் வெற்றி பெற்றது.அதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அரியணை ஏறியதும் 5 திட்டங்களை அமல்படுத்தி அதிரடி காட்டினார்.அப்பா 8 அடி என்றால் அவரது பிள்ளை 16 அடி பாய்கிறார்.அவரது தந்தை திடீரென்று இரவு நேரத்தில் கள ஆய்வு மேற்கொண்டார்.மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினார்.
அந்தவகையில் உதயநிதியும் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு செய்து வருகிறார்.அதில் புதுப்பேட்டை,கொய்யா தோப்பு என்னும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் மனதில் ஹீரோவாக காட்சியளிக்கிறார்.அந்த பகுதி எப்பொழுதும் சக்கடையாளும்,நீராலும் சூழ்ந்து காணப்படும்.திடீரென்று அந்த பகுதியை உதயநிதி ஆய்வு செய்தார்.அவ்வாறு ஆய்வு செய்ததில் மக்கள் அனைவரும் அவர்களின் கோரிக்கைகளை கூறினர்.மக்கள் கோரிக்ககைகளை வீடு வீடாக சென்றும் கேட்டறிந்தார்.
அதனை உடனடியாக மக்களுக்கு நிறைவேற்றியும் தந்தார்.அதன்பிறகு அந்த மக்களிடம் பலர் பேட்டிகள் எடுத்தனர்.அதில் அப்பகுதி மக்கள் கூறியதாவது, இதுவரை நேரடியாக எங்களை வந்து சந்திக்கவில்லை.நாங்கள் வைக்கும் கோரிக்கைகளை எப்போதும் நிறைவேற்றியதும் இல்லை.உதயநிதி அவர்கள் இதுபோல வந்து,எங்கள் கோரிக்கைகளை கேட்டு அனைத்தும் உடனடியாக செயல்படுத்தி கொடுத்தது இதுவே முதல் முறையாகும்.
அதுமட்டுமின்றி உதயநிதி அவர்கள் எங்களுக்கு ஹீரோ போல காட்சியளிக்கிறார் என்றார்கள்.அதிலும் குறிப்பாக ஒரு பெண்மணி எனக்கு மகேஷ்பாபு ஓர் படத்தில் களத்தில் இறங்கி மக்களின் தேவையை நிறைவேற்றுவர்.அதேபோல் நிஜத்தில் பார்ப்பது போல உள்ளது என்றார்.அப்பாவை போல இவர் தோற்றமளித்து வருவதால் இவர் தான் அடுத்த முதலவர் என்றும் பேசி வருகின்றனர்.இது திமுகவில் நிலவும் வாரிசு அரசியலாக தோன்றினாலும் மக்களும் அக்கட்சி தொண்டர்களும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதில் எந்தவித மாற்று கருத்துமில்லை.