சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்தது. சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு தொகுதியில் இரா அருள் மற்றும் மேட்டூர் தொகுதியில் சதாசிவம் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஜிகே மணி, தர்மபுரியில் வெங்கடேஸ்வரன், விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் சட்டசபைத் தொகுதியில் சிவகுமார் உள்ளிட்டோர் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
இவ்வாறான சூழலில் தேர்தல் முடிவுக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தானாகவே முன்வந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்து இருக்கிறார்.இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைத்து செல்லும் முறையில் சில அணுகுமுறைகளை தொடங்கியிருக்கிறார். நோய் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைகளுக்காக அனைத்து கட்சிகள் உடைய சட்டசபை உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழுவை நியமனம் செய்தார் அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக ஜிகே மணி இடம் பெற்றிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணக்கமாக செல்வதற்கு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.அதாவது பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் கூட்டணி கட்சியோ அல்லது எதிர்க்கட்சியாக இருந்தாலும் நல்லது செய்தால் அதனை ஆதரிக்கும் மனப்பான்மை எப்போதுமே பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. அந்த விதத்தில் ஸ்டாலின் தற்போது செய்து வரும் ஒரு சில காரியங்களில் தமிழகத்தின் நலன் அடங்கியிருப்பதால் அதனை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டு இருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.
இந்த நிலையில், சேலம் மேற்கு சட்டசபை தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அருள் மே மாதம் 17ஆம் தேதி இரவு தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் .ஒரு பாலித்தீன் பையால் தன்னுடைய தலையை இறுக்கிக் கட்டியபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
சேலம் மாவட்டத்தில் என்னுடைய மக்களுக்கு தேவை படும் ஆக்சிஜன் கிடைக்காவிடில் அது எனக்கு தேவையா என்று யோசனை செய்து வருகிறேன். காலை என்னுடைய தலை பிளாஸ்டிக் பையை கயிற்றால் கட்டிக்கொண்டு இந்த புகைப்படத்தில் இருப்பது போல சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் வாசலில் உங்களுடைய சட்டசபை உறுப்பினர் காலை ஒன்பது முப்பது மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
நீங்கள்தான் என்னை தேர்ந்தெடுத்தீர்கள் உங்களுடைய வேலைக்காரனாக இதை செய்யலாமா உங்களுடைய கருத்தை தெரிவியுங்கள். எனக்கு சட்டசபை உறுப்பினர் பதவி கொடுத்த உங்களுக்கு இப்பொழுது கொடுக்க என்னுடைய உயிரைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை என்று கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார் சட்டசபை உறுப்பினர் அருள்.
நம்முடைய ஆலோசகர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு சின்னய்யா அனுமதியுடன் இன்னும் இரண்டு நாட்களில் வாய்ப்பு கொடுத்து தர்ணா என அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார் அருள் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 18ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
அதோடு தன்னுடைய ஒரு மாத ஊதியம் ஆன ஒரு லட்சத்து 89 ஆயிரம் ரூபாயை இந்த நோய்த்தொற்று நிவாரண நிதிக்காக வங்கி பரிமாற்றத்தின் மூலமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.இவ்வாறான சூழ்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்ட சபை உறுப்பினர்களின் இந்த தற்கொலை முயற்சியில் தொடர்பான அறிவிப்பு அவருடைய ஆதரவாளர்களிடையே மிகப் பெரிய சலசலப்பை உண்டாக்கியது.
இதனைத்தொடர்ந்து அதற்கு மறுநாள் அதாவது 18ஆம் தேதி அதிகாலையிலேயே சட்டசபை உறுப்பினர் அருள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இரவு முழுவதும் பல தொலைபேசி அழைப்புகள், கமெண்டில் உங்களுடைய நூற்றுக்கணக்கான ஆலோசனைகளை ஏற்று என்னுடைய முந்தைய பதிவை நீக்கம் செய்கிறேன். உங்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளுடன் விழிப்புணர்வு பரப்புரை மட்டும் உங்களுடைய ஆலோசனைப்படி முன்னெடுத்துச் செல்வதற்கு இருக்கிறோம் நன்றி இரா அருள் சட்டசபை உறுப்பினர் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதோடு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையிடம் இருந்து பரந்த உத்தரவின் பெயரில் தான் கடந்த 19ஆம் தேதி அதாவது நேற்றைய தினம் எல்லாம் மாறி போனதாக தெரிவிக்கிறார்கள். சேலம் இரும்பாலையில் 500 டன் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவமனையின் பணியை விரிவு செய்யும் பணி குறித்து ஆலோசனை செய்ததில் சேலம் மேற்கு மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் சேலம் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை செய்து சமயத்தில் சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சட்ட சபை உறுப்பினர்களான அருள் மற்றும் சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.