முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் திருப்பூர் பயணம்!! நடந்தது என்ன??
கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஒன்றரை வருடமாக இந்தியாவை விடாது துரத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்த வருடம் தொடர்ந்து வரும் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை கடந்த வருடத்தை விட வீரியம் அதிகம் உள்ளதாக சுகாதரத்துறை அறிவித்துள்ளது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகளில் பல கடுமையான கட்டுபாடுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பல கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழக்கும் காட்சி பார்ப்போர் மனதை பதைபதைக்க வைக்கிறது.
மேலும் பல இடங்களின் மருத்துவமனைகளில் படுக்கை இல்லாததால் கொரோனா நோயாளிகளை அவசர ஊர்தியில் வைத்து சிகிச்சை அளிக்கும் காட்சி மனதை உலுக்குகிறது. அதிகரித்து வரும் கொரோனா வைரஸை எதிரிக்கும் விதமாக மத்திய அரசு அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறித்தி வருகிறது.
இதன் படியாக கடந்த மாதம் முதல் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா நடிகை, நடிகர்கள் என பல பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய முக்கியத்துவத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் மே மாதம் 1 ஆம் தேதி முதல் ஆரபித்த 18 வயதிற்க்கு மேற்ப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடா முன் பதிவு நடைபெற்று வந்தது. இதைத் தொடந்த்து இன்று முதல் 18 வயதிற்க்கு மேற்ப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி உள்ளது. 18 வயதிற்க்கு மேற்ப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முத்தவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருப்பூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.