வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற நபர்கள் பயிற்சியின்போது ஐந்து லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி பெறும் விதத்தில் ஒரு வருடத்திற்கு பணியாற்றிய பின்னரே மருத்துவ பணி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை அதிகம் இருப்பதன் காரணமாக, இந்த இரண்டு விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற சுமார் 500 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்குவதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஆகவே தற்சமயம் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று காத்திருக்கும் 500 பேரும் உடனடியாக மருத்துவ பணியை ஆரம்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மருத்துவர்களின் தேவை அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு அரசு இவ்வாறு ஒரு முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த சூழ்நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்கும் நடவடிக்கையாக தமிழக அரசின் இந்த அறிவிப்பு அமைந்திருப்பதாக சொல்கிறார்கள்.
இதன் காரணமாக 500 மருத்துவர்களும் எந்தெந்த பகுதிகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருக்கிறார்களோ, அந்த பகுதிகளுக்கு பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் வழியாக பொதுமக்களுக்கு மிகவும் விரைந்து சிகிச்சை கொடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.