டிஸ்சார்ஜ் ஆனார் விஜயகாந்த்! தொண்டர்கள் மகிழ்ச்சி!

0
147

உடலை குறைவு காரணமாக சென்ற சில வருடங்களாகவே விஜயகாந்த் நீண்ட ஓய்வில் இருந்து வந்தார். அவ்வப்போது அவர் சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அத்துடன் கட்சி நடவடிக்கைகளில் இருந்தும் ஒதுங்கியே இருந்து வந்தார். ஆகவே கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் கையில் எடுத்துக்கொண்டு கட்சிகளின் வேலைகள் எல்லாவற்றையும் அவரே கவனித்து வந்தார்.

இந்த சூழலில் கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தேமுதிக தொண்டர்கள் அவரது உடல் நிலையை எண்ணி பதற்றம் அடைந்து விட்டார்கள்.

கடந்த 19ஆம் தேதி அதிகாரிகளையே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் தொண்டர்கள் பதட்டம் அடைந்து விட்டார்கள் என்பதை அறிந்துகொண்ட தேமுதிக தலைமை அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஓரிரு தினங்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்பின்னரே தேமுதிக தொண்டர்கள் நிம்மதி அடைந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை முடிந்த பின்னர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். அதோடு நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் அவரை கட்சியை சார்ந்தவர்கள் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

Previous articleமூன்று நாள் மூன்று வேளை குடித்தால் போதும்! சளி காய்ச்சல் பறந்து போய்டும்!
Next articleநான் நடித்து காட்டியது போலவே நடக்கிறதே! நடிகர் வடிவேலு!