மனிதம் போற்றும் வகையில் நாய்களுக்கு பிரியாணி சமைக்கும் நல் உள்ளம்!

0
198

இந்த காலகட்டத்தில் மனிதர்களுக்கு யாரும் உணர்வு அளிக்காத நிலையில் 190 மேற்பட்ட நாய்களுக்கு பிரியாணி சமைத்த உணவு அளித்து வருகிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த ரஞ்சித் நாத்.

 

கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை மனிதர்களை ஒரு வழி செய்து கொன்று குவித்து வருகிறது.இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் உணவின்றி வணிக ரீதியாகவும் சரி உடல் ரீதியாகவும் சரி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் தெருநாய்களின் மீது பாவப்பட்டு உணவு சமைத்து வழங்கி வருகிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த ரஞ்சித். சாப்பாடு என்றால் வெறும் சாப்பாடு கிடையாது பிரியாணி தான்.

 

தனது குழந்தைகளைப் போல் பாவித்து அந்த தெரு நாய்களை கவனித்து வருகிறார்.மேலும் எனது கடைசி மூச்சு உள்ளவரை இந்த பணியை நான் தொடர்ந்து செய்வேன் என்கிறார் ரஞ்சித்.

 

 

புதன் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவர் பிரியாணி சமைக்கிறார்.மதியம் உணவு சமைக்கத் தொடங்கி மாலை 5 மணிக்கு ஒவ்வொரு தெருவாக சுற்றி அலைந்து எல்லா நாய்களுக்கும் உணவளிக்கிறார். பத்திற்கும் மேற்பட்ட இடங்களை தேர்வு செய்து அந்த இடத்திற்கு சென்று உணவளிக்கிறார்.

 

இதுகுறித்து அவர் கூறியதாவது,

190 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவு அளிக்கிறேன். என் குழந்தைகள் என்னைப் பார்த்ததும் ஓடி வருவார்கள். என்னைப் பார்த்ததுமே அடையாளம் கண்டு பிடித்து விடுவார்கள். நான் நாய்களுக்கு மட்டுமல்ல, பூனைகளுக்கும் உணவளிக்கிறேன் என்று கூறினார்.

 

மேலும் நான் சமைக்கும் பிரியாணியில் கரித்துண்டுகள் கம்மியாக இருக்கலாம். ஆனால் எலும்புகளை அதிகமாக சேர்ப்பேன். எலும்புகள் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் , மேலும் விலையும் கம்மியாக இருக்கும் என்பதால் ,அதிகமாக எலும்புகளை சேர்ப்பேன். இதனால் நான் நிறைய நாய்களுக்கு  உணவு அளிக்கும் பணியை செய்து வருகிறேன் என்று அவர் கூறினார்.

 

 

Previous articleதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? வெளியானது புதிய தகவல்!
Next articleவலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா! வெளியான தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here