அதிமுகவால் வைக்கப்பட்ட ஆப்பு! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
93

சென்னை அரும்பாக்கத்தில் வசிப்பவர் அதிமுக உறுப்பினர் தேவராஜ் என்பவர் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில் நோய்த்தொற்று நிவாரணம் வழங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் விதமாக நியாயவிலை கடைகளுக்கு அருகே சாலையோரத்தில் சுவரொட்டிகள் வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகவே ரேஷன் கடைகளுக்கு அருகில் ஆளுங்கட்சியினர் விளம்பர பலகை வைப்பதற்கு தடை விதித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று இதன்மூலம் கோரிக்கையை வைத்திருந்தார் தேவராஜ்.

இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி உள்ளிட்டோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நிவாரண உதவி கொடுக்கும்போது அரசை மட்டுமே முன்னிலைப் படுத்த வேண்டுமே ஒழிய ஆளுங்கட்சியை முன்னிலைப் படுத்த கூடாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதோடு மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் புகைப்படம் நியாயவிலைக் கடைகளில் இடம் பெறுவது தவறு கிடையாது எனவும், ஆனால் ஆளும் கட்சியின் சின்னத்தை தான் பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் நிவாரணம் கொடுக்கும் நிகழ்வை அரசியல் நிகழ்ச்சியாக மாற்றக் கூடாது எனவும், தெரிவித்த நீதிபதிகள், நிவாரண உதவிகள் கொடுக்கும் போது நோய்த்தடுப்பு விதிகளை கண்டிப்பாக எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.