அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில் இவருக்கு சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலரின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது, இருந்தாலும் என்னை மட்டும் கட்சியை விட்டு நீக்கியது எதற்காக என்று முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கேள்வி எழுப்பியிருக்கிறார். கட்சியை விட்டு நீக்கியதற்கு ஊழல் குற்றச்சாட்டு ஒன்றும் முக்கிய காரணம் கிடையாது. அவர் திமுக பக்கம் சாய்வதை தெரிந்துகொண்டுதான் அதிமுக தலைமை இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்ததாவது, என்னுடைய தாயும், சகோதரர்களும் சென்னையில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார்கள் 15 தினங்களுக்கு முன்னர் என்னுடைய தாய் உயிரிழந்துவிட்டார். சகோதரிக்கு வென்டிலேட்டர் தேவைபட்டது அதன் காரணமாக, வாணியம்பாடியில் என்னுடைய மகன் நடத்தி வரும் மருத்துவமனையிலிருந்து வெண்டிலேட்டர் எடுத்து செல்வதற்காக வாணியம்பாடி சென்றேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் அந்த சமயத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர் தேவராஜ் என்னை தொடர்புகொண்டு என்னுடைய தாய் இறப்புக்கு அனுதாபம் தெரிவித்தார். இதன் காரணமாக, அவரை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துச் சொல்ல நினைத்தேன். பயணியர் விடுதியில் அவர் தங்கி இருப்பதாக தெரிவித்தார்கள், சென்னை செல்லும் வழியில் தான் பயணியர் மாளிகை இருக்கிறது. அதன் காரணமாக, வழியில் காரை நிறுத்தி தேவராஜை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் என்று தெரிவித்த அவர் இதன் காரணமாக தான் என்னை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
என்னுடைய தாயின் இறப்பு தொடர்பாக திமுகவின் மாவட்டச் செயலாளர் தூக்கம் விசாரித்ததை தவிர மற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் இது தொடர்பாக என்னிடம் எதையும் விசாரிக்கவில்லை. அமைச்சராக இருந்த போதிலும் இதுவரையில் என்னை கட்சியில் மதிப்பதே கிடையாது. நான் திமுகவில் இணைகிறேன் என்பதை விரைவில் தெரியவரும் என்று தெரிவித்திருக்கிறார் நிலோபர் கபில்.