பகிரங்க மன்னிப்பு கேட்டார்! அமைச்சர் பொன்முடி!

0
178

விழுப்புரம் மாவட்டம் மேல மங்கலம் கிராமத்தில் நோய்த்தொற்று தடுப்பூசி முகாமை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆரம்பித்து வைத்தார். அந்த சமயத்தில் அந்த பகுதியில் இருந்த நிருபர்கள் தமிழக அரசின் பத்திரிகையாளர்களுக்கான 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கிராம நிர்வாகம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை அமைச்சர் பொன்முடி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். அங்கே இருந்தவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தவே கிராமத்தில் வசிக்கும் பத்திரிகையாளர்களுக்கு ஊக்கத் தொகை கொடுக்க இயலாது. மாவட்ட செய்தியாளர்களுக்கு மட்டுமே பணம் கொடுக்கப்படும் என்று ஒருமையில் பேசி இருக்கின்றார். இதற்கு முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், பத்திரிக்கையாளர்களை அவமதித்த உரையாற்றிய விவகாரத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததன் காரணமாக, தன்னுடைய செயலுக்கு பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

Previous articleபடகு விபத்தில் சிக்கி 50 பேர் பலி! 100 பேரை காணவில்லை!!
Next articleதெலுங்கு படத்தில் ஹீரோவாக கால்பதிக்கும் “விஜய் சேதுபதி”