படகு விபத்தில் சிக்கி 60 பேர் உயரிழந்துள்ள சம்பவம் நைஜீரியாவில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் படகு உடைந்து 60 பேர் பலியாகி உள்ள நிலையில் 100 பேரை காணவில்லை.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள கெப்பி என்ற மாகாணத்தில் உள்ள நிகர் நதியில், 200 பயணிகளுடன் படகு ஒன்று நேற்று சென்றுள்ளது. அத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் மணல் மூட்டைகள் சென்றுள்ளன.
கெப்பி மாகாணத்தில் உள்ள சந்தையில் விற்பனைக்காக இந்த மணல் மூட்டைகள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதேபோல் பயணிகளும் அந்த சந்தைக்கு செல்வதற்காகவே படகில் பயணித்தனர்.
புறப்பட ஒரு மணி நேரத்தில் வாரா நகரில் உள்ள கைன்ஜி என்ற ஏரியில் ஏற்பட்ட விபத்தில் படகு விபத்துக்கு உள்ளாகி இரண்டாக உடைந்து அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பலியாகி உள்ளனர். மேலும் 100 பேரை காணவில்லை. அவர்களும் உயிருடன் மீட்கப்படுவதற்கு எந்த ஒரு வாய்ப்பு இல்லை என மீட்பு குழுவினர் கூறியுள்ளனர்.
மேலும் காணாமல் போன 100 பேரை தேடும் பணியில் தீவிரமாக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். மேலும் பாரம் தாங்காமல் படகு இரண்டாக உடைந்து இருக்கலாம் என நைஜீரியாவின் நீர்வழி போக்குவரத்து துறையினர் கூறியுள்ளனர்.
இது நைஜீரியாவில் இந்த மாதத்தில் நடந்த 2-வது படகு விபத்தாகும். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நைஜர் மாகாணத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.