கொரோனா நோயாளிகளின் ஆக்ஸிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவர்

0
122

இரண்டு மூன்று நாட்களாக அந்த மருத்துவமனையில் யாரும் சாகவில்லை அதனால் ஆக்சிஜன் இணைப்பைத் துண்டித்தேன் என ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் கூறிய சம்பவம் ஹைதராபாத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாடே கொரோனா என்னும் எமனின் பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது.ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல மக்கள் உயிருக்கு போராடி வரும் நிலையில் இந்த மாதிரியான சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் கிடைக்காமல் பல நாடுகளிலிருந்து கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எத்தனையோ பேர் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்ஸில் உயிரை விட்டவர்களை பார்த்து இருக்கிறோம்.

 

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் திடீரென்ற ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் அனைவரும் திணறி உள்ளனர். என்னவென்று சென்று பார்த்த பொழுது தான் ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

 

ஆனால் இந்த கேவலமான செயலை யார் செய்து இருப்பார்கள் என்று சிசிடிவி கேமராக்களில் சோதனை செய்த பொழுது அங்கு பணி செய்யும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் இந்த காரியத்தை செய்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

மருத்துவ வளாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்து உதைத்துள்ளனர். இரண்டு மூன்று நாட்களாக இந்த மருத்துவமனையில் யாரும் சாகவில்லை, காசு இல்லாமல் தவித்து வந்ததால், இந்த மாதிரியான செயலில் ஈடு பட்டேன் என்று ஆம்புலன்ஸ் டிரைவர் கூறியுள்ளார். போலீசார் அவனை லத்தியால் மரண அடி அடித்து உயிரின் மதிப்பை புரிய வைத்தனர்.

 

அவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இதைப்பார்த்த இணையதள வாசிகள் அந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.தன் உயிரை கூட மதிக்காமல் பிற உயிர் காக்க வேண்டும் என்று மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இருக்கும் பொழுது இப்படியும் ஒருவரா என்று திட்டியுள்ளனர்.