தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை!

Photo of author

By Kowsalya

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும் என மது கடை உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொற்று குறைந்த எண்ணிக்கையில் பாதிப்படைந்துள்ளது. கேரளா தமிழ்நாடு கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மட்டுமே சற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒரு சில தினங்களாக குறைந்து வருவதை காணலாம்.

இந்நிலையில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு மத்திய அரசு கோவாக்ஷின் மற்றும் கோவிசில்டு தடுப்பூசி மருந்துகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இருப்பினும் ஒரு விழிப்புணர்வு இல்லாமையால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு படி சென்று கடந்த சில தினங்களுக்கு முன் பாரபங்கி என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு தடுப்பூசி போட சென்றனர். அதிகாரிகளைப் பார்த்ததும் கிராம மக்கள் அருகில் உள்ள ஆற்றில் குதித்து தலைதெறிக்க ஓடி விட்டனர். இதனால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பின் தடுப்பூசி போடப்படும் எனக் கூறி அவர்கள் சென்றனர்.

இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் எடவா என்ற மாவட்டத்தில் மாஜிஸ்திரேட் அதிகாரி ஹேம்சிங் என்பவர் ஆய்வு மேற்கொண்டார். மது விற்பனை செய்யும் உரிமையாளர்களிடம் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் மட்டுமே மது விற்க வேண்டும் என்றும். தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ்களை காட்டினால் மதுவை விற்கலாம் என்றும் கூறினார். மது வாங்க வரிசையில் நின்றவர்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை என கூறி அவர்களை திருப்பி அனுப்பினார்.

அதேபோல் பிரோசாபாத் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே அவர்களுக்கு மே மாத சம்பளம் கிடைக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் 45 வயது மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தடுப்பூசி உள்ளதா என்பதை அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.