பாமக என கூறிக்கொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு! கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் என ஜிகே.மணி அறிக்கை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் முன்னாள் அமைப்பு செயலாளர் என கூறிக்கொள்ளும் ராஜா என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என பாமக தலைவர் ஜிகே மணி அவர்கள் தெரிவித்துள்ளார்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர் என கூறி ராஜா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதாக தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின, இதனை மறுப்பு தெரிவித்து ஜி.கே மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பின்வருமாறு:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சியில் சேர்ந்தவர் ராஜா. பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர் என்றும் அக்கட்சியில் இருந்து விலகி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாகவும் ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்.
பாமகவில் சில ஆண்டுகளுக்கு முன் ராஜா இருந்தார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். பாமகவின் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார், இவரிடம் பாமகவினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும்
இனியும் பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரை பயன்படுத்தி ராஜா மோசடியில் ஈடுபட்டால் அவர் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.