கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பீர் இலவசம்!! அரசின் புதிய திட்டம்!!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 2 ஆம் அலை நாளுக்கு நாள் அத்திகரித்துக் கொண்டு தான் உள்ளது. இதனால் பல நாடுகள் அவரவர் நாட்டு மக்களை கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் இதுவரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.41 கோடியாக அதிகரித்து உள்ளது. மேலும் இதுவரை அங்கு 6 லட்சம் கொரோனா நோயாளிகள் பலியாகி உள்ளனர்.
நாள் தோறும் 10 ஆயிரத்திற்கு மேற்ப்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிப்படைகின்றனர். இந்த நிலையில் அமெரிக்கா அரசு மக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கூறி உள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் அமெரிக்க அரசு பல வகையில் மக்களை கவர்ந்து விளம்பரங்களை செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்கவில் வரும் ஜூலை மாதம் 4 ஆம் தேதி கொண்டாடவிருக்கும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக அந்த நாட்டில் உள்ள 70 % பெரியவர்களுக்கு தடுப்பூசி போட அந்த நாட்டின் அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.
மேலும் தொடங்கி உள்ள கோடை காலத்தில் கொரோனா இல்லாத நாடாக அமெரிக்காவை மாற்ற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இந்த நிலையில் தடுப்பூசி நிறுவனங்களும் அமெரிக்க குடிமகன்களை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் இதுவரை அமெரிக்க உள்ள மக்கள்தொகை அடிப்படையில் 62.8 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 133.6 மில்லியன் பேருக்கு இரண்டாவது டோஸ்களையும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தனது லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் ஆன்யூசெர் புஷ் நிறுவனம் வரும் ஜூலை 4 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அந்த திட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் பீர் இலவசம் என்று கூறியுள்ளது.