பொது இடங்களில் இனி இவையெல்லாம் செய்தால் அபராதம்! மாநகராட்சியின் புது திட்டம்!

0
158
Penalty for doing all this in public anymore! Corporation's new project!
Penalty for doing all this in public anymore! Corporation's new project!

பொது இடங்களில் இனி இவையெல்லாம் செய்தால் அபராதம்! மாநகராட்சியின் புது திட்டம்!

கொரோனா நோய் தொற்றின் காரணமாக பல திட்டங்களை அரசுகள் செய்து வருகின்றன.அதன் காரணமாக முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர் தன் உயிரையும் பணயம் வைத்து சேவை செய்து வருகின்றனர்.

மும்பை பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் எச்சில் துப்பினால் ரூ.200 அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இந்த அபராத தொகையை ரூ.1,200 ஆக அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், அபராதத்தை அதிகரிக்கும் திட்டத்துக்கு சமீபத்தில் கமிஷனர் இக்பால் சகால் ஒப்புதல் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த திட்டத்துக்கு மாநகராட்சி பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டும். அதற்கு முன் மாநில அரசும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதமாக கடந்த பல ஆண்டுகளாக ரூ.200 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒரு மனு தொடர்பான விசாரணையின் போது, பொது இடங்களில் அத்துமீறுபவர்கள் மீது போலீசார் ரூ.1,200 அபராதம் விதிக்கும் போது, மாநகராட்சி மட்டும் எச்சில் துப்பினால் ஏன் ரூ.200-ஐ வசூலித்து வருகிறது என மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி இருந்தது.

ஆனால் அபராதத்தை அதிகரிக்க மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிடவில்லை என்றார். இந்தநிலையில் கடந்த 6 மாதத்தில் மும்பையில் பொது இடங்களில் எச்சில் துப்பியவர்களிடம் இருந்து ரூ.28 லட்சத்து 67 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக குர்லா, சாக்கிநாக்கா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய எல் வார்டில் ரூ.4¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleஉயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Next articleபோராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்!