பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நாகினி சீரியல் நடிகருக்கு நடிகை யாஷிகா ஆனந்த் ஆதரவு!

0
272

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் நாகினி சீரியல் மிகவும் பிரபலமடைந்ததை தொடர்ந்து நாகினி 2, 3 என எடுக்கப்பட்டது. அதில் ஹீரோவாக நடிக்கும் பேர்ல் வி பூரி என்பவர் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்கிறார்.

 

இந்நிலையில் சாமுராய் படத்தில் நடித்த நடிகையான அனிதா அவர்களும், யாஷிகா ஆனந்த் அவர்களும் மற்றும் பல நடிகைகள் அந்த நடிகர் பேர்ல் வி பூரி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

 

நேற்று முன்தினம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போலீசார் இவரை கைது செய்தனர். விசாரணையை தொடங்கிய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த நடிகருக்கு 14 நாள் நீதிமன்ற காவலில் இருக்கும் படி உத்தரவிட்டனர்.

 

இதனை தொடர்ந்து அடித்த நடிகை நடிகர்களும் இந்த நடிகருக்கு ஆதரவு தெரிவித்து வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் நடிகை யாஷிகா நடிகர் இவருக்கு ஆதரவு தெரிவித்து இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை தெரிவித்துள்ளார். எனக்கு தெரிந்த அன்பானவர்களில் பேர்ல் வி பூரியும் ஒருவர். நான் அவருக்கு ஆதரவளிக்கிறேன். என் நண்பர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புகிறேன். பாசிட்டிவாக இருப்போம் என்று பதிவிட்டுள்ளார். கீழே ஒரு hashtags பிரபலப்படுத்திய உள்ளார். #istandwithpearl எந்த ஹேட்ஸ்டகை பதிவிட்டுள்ளார்.

 

மேலும் அந்த சிறுமியை நடிக்க வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு தகுந்த ஆதாரம் சிக்கி உள்ளதாக போலீசார் இடம்பெறாத தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Previous articleதிமுக ஆட்சியில் அதிக மின்வெட்டுகளைச் சந்திக்கும் மக்கள்! முதல்வர் கவனிப்பாரா?
Next articleபீட்சா வீடு தேடி வரும் போது ரேஷன் பொருட்கள் வரக்கூடாதா? அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here