இப்படி ஒரு சந்தேகத்தினால் கள்ளகாதலனுடன் சேர்ந்து செய்த செயல்! அப்படி ஒரு மனைவி!

0
108
Such an act done with a false lover out of suspicion! Such a wife!
Such an act done with a false lover out of suspicion! Such a wife!

இப்படி ஒரு சந்தேகத்தினால் கள்ளகாதலனுடன் சேர்ந்து செய்த செயல்! அப்படி ஒரு மனைவி!

தற்போதைய நிலைமைக்கு பெண்கள் எல்லாவற்றுக்கும் ரெடி என்பது போல் தான் உள்ளனர். கணவர் மீது சந்தேகம் என்றால் பேசி தீர்க்கலாம். அதைவிட்டு இப்படியா? தீர்வு காண்பது.

தலைநகர் டெல்லியின் நிஹல் விஹார் பகுதியை சேர்ந்தவர் அனில் ஷாவ்(35) . இவருக்கு 31 வயதான புவனேஷ்வரி தேவி என்ற மனைவி உள்ளார். அனில் ஷாவ் டெல்லியில் தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வருகிறார்.

இதற்கிடையில், தனது கணவர் அனில் வேறு பெண்களுடன் தொடர்பில் உள்ளார் என மனைவி புவனேஷ்வரி தேவிக்கு தவறான சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், கணவன் – மனைவி இடையே கடந்த சில மாதங்களாக அவ்வப்போது சண்டை என்பது தொடர்கதையாகி உள்ளது.. புவனேஷ்வரி தேவி மீதும் அனில் ஷாவ் கடுமையாக தாக்குதல் தொடர்ந்து நடத்தியுள்ளார்.

கணவர் இடையேயான சண்டையால் புவனேஷ்வரி, நாளடைவில் ராஜ் என்பவருடன் நெருங்கி பழகியுள்ளார். அதை தொடர்ந்து புவனேஷ்வரிக்கும் ராஜ்க்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், தனது கணவர் தொடர்ந்து வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்துவருகிறார் என்று நம்பி, கணவர் மீது சந்தேகப்பட்டு வந்த புவனேஷ்வரிக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தனது கள்ளக்காதலன் ராஜ் உடன் இணைந்து தனது கணவர் அனிலை தீர்த்துக்கட்ட புவனேஷ்வரி திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த 2-ம் தேதி தனது கள்ளக்காதலனுடன் இணைந்து புவனேஷ்வரி தனது கணவர் அனிலை கொலை செய்துள்ளார். ஆனால், தனது கணவர் அனில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், சந்தேகமடைந்த போலீசார் புவனேஷ்வரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தனது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததால் அவரை தனது கள்ளக்காதலனுடம் சேர்ந்து கொலை செய்ததாக போலீசாரிடம் புவனேஷ்வரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இதனை தொடர்ந்து, புவனேஷ்வரியை கைது செய்த போலீசார் கொலைக்கு உடந்தையாக இருந்த புவனேஷ்வரியின் கள்ளக்காதலன் ராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Previous articleஆட்சிக்கு வந்த 10 தினங்களிலேயே அரசை விமர்சிப்பது அழகல்ல! முன்னாள் அமைச்சர் பளீச்!
Next articleஇந்த மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைகிறது! சுகாதாரத்துறை அமைச்சர் எடுத்த பரபரப்பு பேட்டி!