காந்தி தாத்தாவின் 56 வயது கொள்ளு பேத்திக்கு சிறை தண்டனை! அவருக்கே இந்த நிலையா?

0
168
Gandhi's grandfather's 56-year-old granddaughter jailed Is this his condition?
Gandhi's grandfather's 56-year-old granddaughter jailed Is this his condition?

காந்தி தாத்தாவின் 56 வயது கொள்ளு பேத்திக்கு சிறை தண்டனை! அவருக்கே இந்த நிலையா?

தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின்( வயது 56) . ராம்கோபின் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

இவர் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆவார். இவர் மீது தொழிலதிபர் ஒருவர் பண மோசடி செய்ததாக கடந்த 2015 ம் ஆண்டு புகார் அளித்தார்.

இந்தியாவில் இருந்து, சரக்குகளை, சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்து தருவதாக, மகராஜ் என்ற தொழிலதிபரிடம் இருந்து இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக  வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

கடந்த 2015 ல் தொடரப்பட்ட இந்த வழக்கில் அவருக்கு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டாலும்,  ஆஷிஷ் லதா ராம்கோபின் திங்கள்கிழமை நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றத்தால்   7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உள்ளது.

இப்போது தீர்ப்பு வெளியாகி, மேல்முறையீடு செய்ய முடியாது என்ற நிபந்தனையுடன் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உண்மையாக, அஹிம்சை வழியில் நடந்த காந்தியின் பேத்தியே இப்படி இருந்தால் மற்றவர்களை பற்றி என்ன சொல்ல இருக்கிறது. ஒரு முறை தவறு செய்யும் முன் தன் தாத்தா மகாத்மா என்றாவது நினைத்து பார்த்து இருக்கலாம் அவர். பிள்ளைகள் செய்யும் தவறு பெரியவர்களை பாதிக்கும் என்பது இது தானோ. இப்போது இவருடன் சேர்ந்து காந்தி தாத்தாவின் பெரும் அல்லவா காற்றில் பறக்கிறது.

Previous articleலோடு ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து! 17 பேர் உடல் நசுங்கி பலி!
Next articleதமிழகத்தில் +1 வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு! வகுப்பு தொடங்கும் தேதியும் அறிவிப்பு!