பிறந்து 7 நாளே ஆன குழந்தைக்கு இந்த தொற்றா? அதிர்ச்சியில் மருத்துவமனை!

Photo of author

By Hasini

பிறந்து 7 நாளே ஆன குழந்தைக்கு இந்த தொற்றா? அதிர்ச்சியில் மருத்துவமனை!

கொரோனா தொற்று தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் முதல் அலையில் உயிரிழந்தவர்களை விட இரண்டாவது அலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இதனால் பெரியவர்கள் அதிகம் பாதிகப்பட்ட நிலையில், தற்போது பிறந்த குழந்தை ஒன்று கொரோனா தொற்றால் பாதிகப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி டேவிஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாதாந்திர பரிசோதனைக்கு சென்ற போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அவருக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவருக்கு கடந்த  29 ம்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.தாய்க்கு கொரோன தொற்று இருந்ததால் குழந்தைக்கும் பரிசோதனை செய்தனரமுதல்நாளில் நெகட்டிவ் என்று ரிப்போர்ட் வந்துள்ள நிலையில், மீண்டும் 5 நாட்கள் கழித்து எடுத்த பரிசோதனையில் அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அந்தக் குழந்தை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதனையடுத்து, தங்களின் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டதால் அந்த குழந்தையின் பெற்றோர் கதறி அழுகின்றனர். இந்த சம்பவம் பார்ப்பவர்களை கண் கலங்க செய்தது.

எனவே தான் அரசு தனி நபர் இடைவெளியை கடைபிடியுங்கள், முக கவசம் அணியுங்கள் என்று சொல்கிறது. நாம் அதை காற்றில் பறக்கவிட்டு செல்வதனால் ஏற்படும் பாதிப்புகளை நாம் தானே அனுபவிக்க வேண்டும்.

அடுத்து மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகளவு பாதிக்கப் படுவார்கள் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பெற்றோர் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.