24 வயதுடைய ஒரு பெண் கோவிஷில்டு தடுப்பூசி இரண்டு தவணைகளையும் போட்டுக்கொண்ட மணமகனை வேண்டுமென மேட்ரிமோனியல் சைட்டில் அப்ளை செய்து உள்ளார். ஆனால் இது ஒரு போலி விளம்பரம் என்று சொல்லப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் தடுப்பூசி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதால் உலகெங்கிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இலவச உணவு, விடுமுறை, டேட்டிங் போன்ற பயன்பாடுகள் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு மணமகன் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை அடுத்து தடுப்பூசி போடப்பட்ட மணமகனை தேடும் ஒரு பெண்ணின் திருமண விளம்பரம்தான் இணையத்தை கலக்கி வருகிறது. அந்த விளம்பரத்தில், 24 வயதுடைய சுயதொழில் செய்யும் பெண் ஒருவர், தான் இரண்டு கோவிசில்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டதாக கூறி, அதேபோல் மணமகனும் இரண்டு தவணை கோவிஷில்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு இருக்க வேண்டும் மற்றும் இதர பண்புகளுடன் இருக்கவேண்டும் என்ற விளம்பரம் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமில்லாமல் அந்த விளம்பரத்தை அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். பதிவு செய்து அவர் “விருப்பமான திருமண பரிசு ஒரு பூஸ்டர் ஷாட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த விளம்பரத்தைக் கண்டு பலர் உற்சாகமாக இருந்த போதிலும் பலர் அது உண்மையானதா என்று சந்தேகங்களை எழுப்பினார்கள்.
கோவாவின் ஆல்டோனாவை சேர்ந்த ஒருவர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மக்களை உற்சாகப்படுத்த செய்வதற்காக தொடங்கப்பட்ட பாதிப்பில்லாத பிரச்சாரமாக இந்த விளம்பரம் விளங்குகிறது.
இந்த விளம்பரம் போலியான விளம்பரம் இதை சமூக மருந்தாளுனர் ஆன சவியோ ஃபிகியூரிடோ உருவாக்கப்பட்டது.அந்த விளம்பரத்தில் கொடுத்த தொலைபேசி எண்ணும் அவருடைய தான். அதனால் அவரது தொலைபேசி அழைப்புகள் ஒலிப்பதை நிறுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் அவருக்கு அழைப்பு விடுத்ததாக சொல்கிறார்.
அதை பற்றி அவர் கூறுகையில், மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த உருவாக்கி அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு இட்டதாக கூறுகிறார், அது உண்மை என நினைத்து இப்போது அது வைரலாகி வருகிறது என்று அவர் கூறினார்.
கொல்கத்தா, ஒடிசா மங்களூர் ஆகிய இருந்து அழைப்புகள் வந்ததாக அவர் கூறினார். இந்த விளம்பரம் மிகவும் வைரலாகும் என்று அவர் நினைக்கவில்லை. மேலும் இது நல்ல நோக்கத்தோடு செயல்பட்டதால் இது எந்த விளைவுகளும் இல்லை. இந்த விளம்பரத்தைப் பார்த்து 10 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கூட நான் மன மகிழ்ச்சி அடைவேன் என அவர் கூறியுள்ளார்.
ஏன் இந்த மாதிரியான விளம்பரத்தை நீங்கள் பதிவு செய்தீர்கள் என்பதற்கு சவியோ ஃபிகியூரிடோ அவர் கூறிய பதில், மக்கள் ஒரு தடுப்பூசி தவணை செலுத்தி கொண்டாலும் அவர்களது வாழ்வை காப்பாற்ற முடியும், நாம் மனதார நேசிக்கும் ஒருவரை இழந்து விட்டால் அது எவ்வளவு கொடுமையானது என்று விவரிக்க முடியாது.
நான் என்னுடைய மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவரை கொரோனா இரண்டாவது அலையில் இழந்தேன். அவர் ஒரு தடுப்பூசி டோஸ் கூட போட்டுக் கொள்ளவில்லை. நான் எவ்வளவோ கெஞ்சியும் அவர் போட்டுக் கொள்ளவில்லை. அதனால்தான் இந்த விளம்பரத்தை உருவாக்கினேன் என்று அவர் மனம் உருக பேசினார்.