#Gobackmodi டிவிட்டரில் ட்ரென்ட் செய்பவர்கள் மீது உளவுத்துறை கண்காணிப்பு! பாகிஸ்தானுடன் தொடர்பா என விசாரிக்க வாய்ப்பு

0
85

Gobackmodi டிவிட்டரில் ட்ரென்ட் செய்பவர்கள் மீது உளவுத்துறை கண்காணிப்பு! பாகிஸ்தானுடன் தொடர்பா என விசாரிக்க வாய்ப்பு

தமிழகத்திற்கு இன்று பிற்பகல் வருகை தர உள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களை வரவேற்க தமிழகம் தயாராகி வருகின்றனர்,

பிரதமர் மோடி மற்றும் ஜிங் பிங் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை, ஒட்டுமொத்த உலகத் தலைவர்களின் பார்வை பல்லவ தேசமான மாமல்லபுரத்தை நோக்கி திருப்பி உள்ளனர், இந்த சந்திப்பு நிகழ்வு இந்தியா சீனா நட்புறவில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என நம்பப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க இன்று தமிழகம் வரும் மோடிக்கு எதிராக #Gobackmodi என்ற வாசகத்தை வழக்கம்போல் ட்விட்டரில் ட்ரென்ட் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

#Gobackmodi என்று பதிபவர்கள் மீது உளவுத்துறை மற்றும் உள்துறை அதிகாரிகள் தங்கம் கண்காணிப்புப் பணியை தொடங்கியுள்ளனர், வழக்கமாக பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் திமுக மதிமுக போன்ற கட்சிகள் பலூன்கள் விட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்வார்கள், இது ஒருபடி மேல் போய் தனியாக ஒரு குழுவை அமைத்து அவர்களுக்கு குறிப்பிட்ட பணத்தை கொடுத்து  #Gobackmodi என்ற வாசகத்தை ட்விட்டரில் ட்ரென்ட் செய்ய வைத்து தமிழக மக்கள் என்றும் மோடிக்கு எதிராக இருக்கிறார்கள் என்ற மாயையை இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் பரப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,

தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியை சேர்ந்த மிக முக்கியமான செல்வாக்கு பொருந்திய பலத்துடன் இருக்கும் ஒருவர் இந்த செயலில் முன்னின்று செயல்படுத்தி வருகின்றார்.

தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இதுபோன்ற பணியை செய்து வருகிறது என பாஜகவினர் நேரடியாகவே பல இடங்களில் தெரிவித்து வருகின்றனர்.

தற்பொழுது மோடி- ஜி ஜின் பிங் இவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை பாகிஸ்தான் விரும்பவில்லை, காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு இந்தியாவுக்கு எதிரான உலக நாடுகளை அழுத்தம் கொடுக்க பாகிஸ்தான் திண்டாடி வருகிறது,
இதுபோன்ற சூழ்நிலையில் இச்சந்திப்பு நிகழ்ச்சி பாகிஸ்தானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் ராஜதந்திரம் உலகத் தலைவர்களை இந்தியாவிற்கு ஆதரவாக திருப்பி உள்ளதால் என்ன செய்வதறியாமல் திகைத்து கொண்டிருக்கிறது,

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மோடி ஜி ஜின் பிங் சந்திப்பு நிகழ்வை தமிழக மக்கள் ஏற்காதது மாதிரி #Gobackmodi என்ற வாசகத்தை பாகிஸ்தானிலிருந்து பரப்ப ஏற்பாடு செய்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சமூக வலைத்தளங்களில் நாளை குழுவாக செயல்படும் #Gobackmodi என்ற வாசகத்தை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்பவர்கள் அனைவரும் உளவுத்துறையின் கண்காணிப்பில் நேரடியாக இருப்பார்கள், அவர்களுக்கும் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுடன் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த அதிகாரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் நேரடி பார்வை தமிழகத்தின் மீது விழுவதால் சமூக வலைதள வாசிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள கட்சிகளில் மிகவும் வீரியமாக மத்திய அரசை எதிர்த்தது திமுக மட்டும்தான், இதனாலேயே வேலூர் தேர்தலில் முஸ்லிம் சமுதாய வாக்குகள் கிடைக்க வழிவகை செய்து தங்களது வெற்றிக்கு வழி வகுத்துக் கொண்டனர், பாகிஸ்தான் ஊடகங்கள் காஷ்மீர் விவகாரத்தில் திமுகவை பாராட்டி பாகிஸ்தான் முழுவதும் பிரபலப்படுத்தியது, வைகோவும் தன் பங்குக்கு மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார், இதனால் திமுக மற்றும் மதிமுகவின் ஐடி விங் பக்கம் மீது உளவுத்துறையின் பார்வை பலமாக விழும் என்பதில் சந்தேகமில்லை.

author avatar
Parthipan K