மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது முதியவரை அடித்துக் கொன்ற போலீசார்! 8 பேர் இடைநீக்கம்!

0
127

கர்நாடக மாநிலத்தில் கொடகு மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மனிதரை போலீசார் அடித்து கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கொடகு என்ற மாவட்டத்தில் மனநிலை சரியில்லாத ராய் டிசோசா 50 வயது. இவர் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக கூறி போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து 8 பேர் ஞாயிற்றுக்கிழமை இடை நீக்கம் செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஜூன் 9ஆம் தேதி விராஜ்பேட்டை டவுன் காவல் நிலையம் அருகே நடந்ததாக ஐஜிபி பிரவீன் மதுகர் பவார் தெரிவித்தார்.

இறந்த ராய் டிசோசாவின் சகோதரர் கொடுத்த புகாரில், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக மனநிலை பாதிக்கப்பட்ட டிசோசாவை போலீசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பலமாக தாக்கி உள்ளனர். பலமாக தாக்கியதில் டிசோசா மயக்கம் அடைந்து இருக்கிறார். உடனே போலீசார் டிசோசாவின் அன்னைக்கு தொலைபேசி மூலம் அழைத்து உங்களது மகனைக் கூட்டிக் கொண்டு போகுமாறு சொல்லியுள்ளனர். பதறி அடித்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு சென்று டிசோசாவை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மயக்க நிலையில் இருந்த அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். டிசோசா சிகிச்சை பலனின்றி ஜூன் 12 அன்று உயிரிழந்து விட்டார் என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான அறிக்கையை ஐ.ஜி.பி பவார் கூறுகையில், நியாயமான மற்றும் பக்கசார்பற்ற விசாரணையை உறுதி செய்யும் நோக்கில் 8 போலீஸ்காரர்களை இடை நீக்கம் செய்வதற்கான முடிவு அறிக்கையில் எடுக்கப்பட்டது.

தலைமை கான்ஸ்டபிள் சுனில், போலீஸ் கான்ஸ்டபிள் லோகேஷ், தனுகுமர், சதிஷ், சுனில் எம் எல், ரமேஷ் ஏ, கே ஜி நேரு, மற்றும் பி டி பிரதீப் என 8 அதிகாரிகள் தலைமை கான்ஸ்டபிள் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் டிசோசா பணியாளர்களை அச்சுறுத்தியதாக போலீசாரால் சொல்லப்படுகிறது. மேலும் இந்த வழக்கு மாநில குற்ற விசாரணை துறை சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Previous articleசெல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
Next article150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை! மீட்பு பணி தீவிரம்!