பரிசோதனைக்கு சென்ற சிறுமி! ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
உலகில் எவ்வளவு விசித்திரமான விஷயங்கள் நடைபெறுகின்றன. கடவுள் என்னவெல்லாம் படைத்திருக்கிறான். ஊட்ட சத்து குறைபாட்டினால், ஏற்பட்ட விசித்திரமான தலைமுடியை சாப்பிடும் பழக்கம் இருக்குமாம். இனம்த செய்தியில் கூட அப்படி ஒரு செய்திதான் பார்க்க போகிறோம்.
தெலுங்கானாவில், உள்ள ஒஸ்மானியா பொது மருத்துவமனையில், 17 வயதுடைய சிறுமி ஒருவர் சேர்ந்துள்ளார்.
ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த சிறுமி, கடுமையாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் Rapunzel என்ற அரிய நோயால் பாதிக்கப்படிருந்தார்.
அவரை பரிசோதனை செய்ய ஸ்கேன் செய்யும் போது அவரது வயிற்றில், 2 கிலோ முடி இருந்ததை கண்டு அதிர்ந்தவர்கள், பின் நோயை பற்றி ஆராய்ந்து தீர்வை சொல்லி உள்ளனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், உளவியல் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக தங்கள் தலைமுடியை உட்கொள்வார்களாம். கடந்த 5 மாதங்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியை, ஸ்கேன் செய்த போது தலை முடி இருப்பது தெரிய வந்துள்ளது.
வயிற்றில் இருந்த முடியை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் நாகேந்தர் பி அடங்கிய மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்தனர்.
அப்போது சுமார், 150 செ.மீ நீளமுள்ள 2 கிலோ முடியை மீட்டெடுத்தனர். இதுவரை உலகளவில் மிக நீண்ட முடி இருந்தது இந்த நோயாளியின் வயிற்றில் தான், உலகளவில் இதுவரை 68 வழக்குகள் பதிவாகியுள்ளன. 150 செ.மீ முடியில், 30 செ.மீ வயிற்றிலும், 120 செ.மீ சிறிய குடலிலும் இருந்ததுள்ளது என மருத்துவர்கள் தெரிக்கின்றனர்.
ஒரு மாதத்திற்கு முன்பே அறுவை சிகிச்சை செய்ய நாள் குறிக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று பாதித்த நிலையினால், தாமதமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விட்டது.
தலைமுடி செரிமான பகுதியில் தங்கி இருந்ததால், ஊட்டசத்து குறைபாடு அதிகளவில் ஏற்பட்டது என்றும் கூறினார்.