முதலமைச்சர் ஆளுநர் உள்ளிட்டோர் செல்லும் வழியில் பெண் காவலர்களை பணியில் அமர்த்த கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு உத்தரவை பிறப்பித்தார். இது பல சிக்கல்களை உண்டாக்கும் என்று ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தெரிவித்திருக்கின்றார். தமிழகத்தில் பலர் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து இருக்கின்ற நிலையில், இந்த அறிவிப்பு சிக்கலை உண்டாக்கும் என்று முன்னாள் காவல்துறை அதிகாரி திலகவதி தெரிவித்திருக்கின்றார்.
தமிழக காவல்துறையில் ஆண், பெண் என்று இருவருமே சமமான பயிற்சி, சமமான சம்பளம், சமமான வாய்ப்புகள் என்று எல்லாவற்றையும் கொடுக்கும்போது இவ்வாறான பெண்களின் பிரச்சனைகளை தெரிவித்துக்கொண்டு புலம்பிக்கொண்டே இருப்பது சரியாக இருக்காது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
அதிக அளவிலான சலுகைகள் கொடுக்கப்படும் சமயத்தில் உரிமைகள் இழப்பில் கொண்டுபோய் விட்டு விடும் என்று தெரிவித்திருக்கின்றார் திலகவதி. இவ்வாறு பிரித்துக் கொடுத்து கொண்டே இருந்தால் ஆண் காவலர்கள் மட்டுமே துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பணி அமர்த்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
கழிவறை பிரச்சனை மற்றும் மாதவிடாய், கர்ப்பகாலம், போன்றவைதான் பெண் காவலர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள் இந்த பிரச்சனைகளுக்கு போதிய வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு வழியில் அமர்த்தாமல் இருப்பது சரி கிடையாது என்றும் திலகவதி தெரிவித்திருக்கின்றார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பை பெண் காவலர்கள் ஏற்றுக் கொண்டு விட்டால் எதிர்காலத்தில் சம்பள குறைப்பு இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. சிறிய வட்டத்துக்குள்ளேயே பெண் காவலர்கள் சுருக்கி விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றார். முன்னாள் காவல்துறை அதிகாரி திலகவதி அவர்கள்.