குழந்தைகள் இருப்பதை மறைத்து மூன்றாவது திருமணம் செய்த பெண்! 90 கிட்ஸ்ன் பரிதாபம்!
ஆண்கள் தான் இப்படி என்றால் புதிதாக ஒரு பெண்ணும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார். தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி செய்ய எப்படி மனது வந்ததோ? எதற்காக மற்றவர்களை ஏமாற்ற வேண்டும். ஆனால் இவர் மூன்றாவது கணவரிடம் மட்டும் தான் பணம் வாங்கி தலைமறைவாகி உள்ளதாக கூறுகிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டம், விஜயபுரம் மண்டலம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்த வாலிபர் சுனில் குமார்( வயது 29) . இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் திருப்பதி ஏ.டி.பி. நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறி சுகாசினி என்பவர் அறிமுகமாகி உள்ளார். நாளடைவில் சுனில்குமாருடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்ட சுகாசினி அவரை காதல்வலையிலும் வீழ்த்தியுள்ளார்.
தனக்கு பெற்றோர் மற்றும் உறவினர் யாரும் இல்லாத ஒரு ஆதரவற்ற பெண் என்று கூறி சுனில்குமாரை நம்பவைத்து கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார். சுனில் குமாரின் குடும்பத்தினரும் சுகாசினிக்கு 3 சவரனில் தங்க நகைகளை வாங்கி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுவயதில் இருந்து தன்னை வளர்த்த மாமாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், கூறி இரண்டு முறைகள் 6 லட்சம் ரூபாய் வரை சுனில்குமாரிடம் பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இதை அறிந்த பெற்றோர் கடந்த 7 ம் தேதி சுனிலிடம் இருந்து தங்களுக்கு தெரியாமல் பணம் பெற்றதை அறிந்தவர்கள், சுகாசினியிடம் பணத்தை என்ன செய்தாய் என்று கேட்டுள்ளனர். அதைனை தொடர்த்து சுகாசினி மாயமானதாகவும் கூறப்படுகின்றது.
அவர்கள் தொலைபேசியில் சுகாசினியை தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர், ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதோ ஒன்றை தவறாக உணர்ந்த சுனில் ஆவணங்களை சரிபார்த்தார். ஆதார் அட்டையில் உள்ள முகவரி அடிப்படையில் சுகாசினியை தேடிய போது சுனில்குமாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் காத்து இருந்தது.
சுகாசினி ஏற்கனவே நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் செய்து அவருக்கு ஒரு மகள் இருப்பதையும் கண்டுபிடித்தார். இதற்கிடையில், சுனிகுமாரை செல்போனில் தொடர்பு கொண்ட சுகாசினி , தான் ஐதராபாத்தில் இருப்பதாகவும், விரைவில் வாங்கிய பணத்தை தந்து விடுவதாகவும், போலீசாரை நாடும் போது வீணாக பிரச்சினைக;ளை சந்திக்க நேரும் என்றும் மிரட்டியுள்ளார்.
மேலும், வெங்கடேசை திருமணம் செய்து கொள்வதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வேறு ஒருவரை திருமணம் செய்ததாக கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் சுனிலின் செல்போனிற்கு அனுப்பி அதிர்ச்சியூட்டி உள்ளார் சுகாசினி.
எப்படி எல்லாம் மனிதர்கள் உள்ளனர். புதிது புதிதாக ஏமாற்றுகிறார்கள் உஷார் மக்களே.இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இவர்கள் மூவருமே 90ஸ் கிட்ஸ் ஆம் பா. இன்னும் எத்தனை சுகாசினி உள்ளர்கள் என பாப்போம்.