நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு சில தினங்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் ஒரு சில தினங்களில் ஒரே அடியாக விலை எகிறி விடுகிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்து வந்தது. ஆனால் தற்சமயம் நாளுக்கு நாள் இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு சென்று கொண்டேதான் இருக்கின்றது.
இந்தியாவைப் பொருத்தவரையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையில் நிலையை நிர்ணயம் செய்கின்றன. சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 91 காசுக்கும், டீசல் விலை 12 பைசா உயர்ந்து 92 ரூபாய் 4 காசுக்கு விற்பனை ஆகி வருகின்றது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணியில் இருந்து அமலுக்கு வந்திருக்கிறது.