திமுகவிற்கு அதிர்ச்சியளிக்கும் அதிமுகவினர்! நிலைக்குமா திமுக வெற்றி!

0
73

தென்காசி சட்டசபை தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றியடைந்த எஸ் பழனி நாடார் அவர்களின் வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பாக போட்டியிட்டு வெறும் 370 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன் சார்பாக வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த மனுவில் தேர்தல் நடைமுறையை சரிவர பின்பற்றவில்லை என்றும், பதிவான மற்றும் அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைகளுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாக முதல் முப்பது சுற்றுக்கள் வரையிலான வாக்குகளை மறுஎண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி அடைந்த எஸ் பழனி நாடார் வெற்றியை செல்லாது என்று அறிவித்து தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் அதிமுக வேட்பாளர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது என தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக சார்பாக காட்பாடி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த ராமு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவரும் அது சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தான் துரைமுருகனிடம் தன்னுடைய வெற்றியை இழந்ததாக சொல்லப்படுகிறது.