பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்!

0
129

நோய் தொற்று பரவல் காரணமாக, பல குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் தமிழக அரசு ஒரு நல்ல முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தார்கள்.

இதேபோன்று ஆந்திராவில் நோய் தொற்று பரவாது காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பத்து லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்துவதற்கு அந்த மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கையை மேற்கொண்டார். அதேபோல தமிழகத்திலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தார்கள்.

அந்த வகையில், தற்சமயம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நோய்த் தொற்று பரவல் காரணமாக, பெற்றோர்களை இழந்து ஆதரவற்று நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் ரூபாய் காப்பீடு கொடுக்கப்படும் என்ற அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்.

அதேபோல உயர்கல்வி வரையில் குழந்தைகளுக்கான கல்வி செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் ஐந்து லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு அவர்கள் 18 வயது நிறைவடைந்த உடன் அந்த தொகை குழந்தைகளிடம் வட்டியுடன் சேர்த்து கொடுக்கப்படும் எனவும், அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு. பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தற்சமயம் தனியார் பள்ளியில் கல்வி பயின்று வந்தால் அதே பள்ளியில் படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான கல்விச் செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவித்தார். அதோடு குழந்தைகளின் பெற்றோர்கள் அரசு ஊழியராக பணியாற்றிய பட்சத்தில் இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று காரணமாக, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் 5 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று ஆரம்பித்து வைத்தார். முதல் கட்டமாக பெற்றோரை இழந்த 10 குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.

Previous articleஒரே போனில் ரூ.10 லட்சம் அபேஸ்! எஸ்பிஐ மீது குற்றச்சாட்டு!
Next articleஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகை இத்தனை கோடியா? வாய்பிளக்கும் ரசிகர்கள்!