தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இன்றைய தினம் முதன் முதலாக டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். இதனை கொண்டாடும் விதமாகவும், அதோடு ஸ்டாலினை வரவேற்கும் விதமாகவும், திமுகவைச் சேர்ந்தவர்கள் ட்விட்டர் பக்கத்தில்#DelhiWelComeStalin என்ற ஹாஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை தன்னுடைய இல்லத்தில் இருந்து 7 மணி அளவில் கிளம்பி 7:20 அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். ஏழு முப்பது மணி அளவில் சிறப்பு விமானம் மூலமாக டெல்லி கிளம்பிச் சென்றார். காலை 10 மணி அளவில் அவர் டெல்லி விமான நிலையத்தை அடைகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக தமிழ்நாடு இல்லம் புறப்படும் முதலமைச்சர் டெல்லியில் இருக்கும் திமுகவின் கட்சி அலுவலகம் மற்றும் அண்ணா அறிவாலயத்தை பார்வையிடுகிறார்.அதன் பின்னர் மீண்டும் அவர் தமிழ்நாடு இல்லம் திரும்புகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மாலை 5 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது வீட்டில் சந்தித்து உரையாற்றுகிறார். அதன்பிறகு தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து இன்று இரவு ஓய்வெடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து உரையாற்றுகிறார்.
கடந்த பத்து வருட காலமாக மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சி டெல்லியில் தன்னுடைய அதிகாரத்தை கோலோச்சி இருக்கின்றது அப்படி பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்தில் இருக்கும் டெல்லியில் ஸ்டாலினை வரவேற்கும் விதமாக இவ்வாறு ஒரு ட்ரெண்டிங் ஆகி இருப்பது பாரதிய ஜனதா கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது மத்திய அமைச்சர்களும் தமிழ்நாட்டிற்கு வருகை தரும்போது அவர்களை தடுக்கும் விதமாக சில ஹாஷ்டேக்குகன் ட்ரெண்டிங் ஆவது வழக்கமாக இருக்கிறது.ஏனென்றால் தமிழகத்தில் திமுக மிகப்பெரிய அளவில் செல்வாக்கு உடைய கட்சி என்ற காரணத்தால், அந்த கட்சியை சார்ந்தவர்கள் இங்கே பலமாக இருக்கிறார்கள்.
ஆனால் மத்தியிலே அதிகாரத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி டெல்லியில் தன்னுடைய அதிகாரத்தை முழுமையாக பிரயோகிக்கிறது ஆனால் அங்கேயே ஸ்டாலினுக்கு இவ்வாறு பிரமாண்டமான ஒரு வரவேற்பு கொடுக்கப்படுகிறது என்றால் அது பாரதிய ஜனதா கட்சியை மிகவும் வருத்தத்திற்கு ஆளாக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.