மத்திய அரசு பணியாளர் நிறுவனம் நடத்தும் IFS பதவிக்கான மெயின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம். கடந்த ஆண்டு சிவில் சர பணிக்கு 296 பதவிகளும் அதேபோல ஐஎஃப்எஸ் பதவிகளுக்கு 90 பதவிகளை நிரப்ப தாகவும் அறிவிப்பு வெளியிட்டது யு பி எஸ் சி.
இதற்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற இருந்த நிலையில் கொரோனா காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி 28 முதல் மார்ச் 7 வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இப்பொழுது வெளியாகியிருக்கும் நிலையில் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமான இணைய தளமான www.upsc.gov.in இணையதள முகவரி மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
இந்த பணிக்கு மெயின் தேர்வுகள் முடிந்துள்ளது. இதில் இந்திய அளவில் 221 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல் தமிழ் நாட்டில் இருந்து 18 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பத்தை ஜூலை 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு டெல்லியில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஆளுமை சோதனை மற்றும் நேர்காணலுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அதே போல் எந்த மாநிலம் வேண்டும் என்ற விருப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது.
ஒரு முறை அதனை சமர்ப்பித்து விட்டால் மறுபடியும் மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது.
https://www.upsc.gov.in/sites/default/files/WR-IFosM-2020-160621-engl.pdf