அமைச்சர் சேகர்பாபு கொடுத்த அதிரடி பேட்டி! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் வெகு விரைவாக கோவில்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கின்றார்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவில் உச்சி விநாயகர் கோவில்கள் போன்ற இடங்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த சமயத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், மலைக்கோட்டை கோவில் உதவி ஆணையர் விஜயதாரணி, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு திமுக தேர்தல் அறிக்கையில் 5 கோயில்களுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சோளிங்கர் நரசிம்மர் கோவில், திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் திருநீர்மலை கோவில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் திருத்தணி முருகன் கோவில் ஆகிய ஐந்து கோயில்களில் ரோப் கார் வசதி அமைப்பதற்கு ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். திருச்சி மலைக் கோட்டையில் ரோப் கார் வசதி ஏற்படுத்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார்.

மீதம் இருக்கின்ற கோவில்களிலும் ஆய்வுகளை நடத்தி முடித்த பிறகு அதன் அறிக்கைகள் முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும் இந்த திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. இந்த கோயில்களில் விரைவில் ரோப் கார் வசதி அமைப்பதற்கான வேலைகளை இந்து சமய அறநிலையத்துறை ஆரம்பிக்கும் என்று தெரிவித்திருக்கின்றார்.

அதோடு ஆன்மீகம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து பொதுமக்களை அதன் மூலமாக பிளவுபடுத்தி அரசியல் செய்ய துடித்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு இவை போன்ற செயல்பாடுகள் சந்தேகத்தை தான் உண்டாக்கும். இருந்தாலும் வார்த்தை ஜாலங்கள் அல்ல கண்டிப்பாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களை தான் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்து இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார்.

தமிழ்நாட்டின் சைவம், வைணவம் என்று ஆறு ஆகமபள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதனை உறுதி செய்து மறுபடியும் செயல்படுத்த தயாராக உள்ளோம் இந்த பள்ளிகளில் இணைவதற்கு வரும் விண்ணப்பங்களை பொறுத்து ஆகம பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.கோவில்கள் குறித்து இதுவரையில் 1600 மனுக்கள் வந்திருக்கின்றன. அதற்கென்று தனியாக ஒரு குழு அமைத்து வாரம்தோறும் ஆணையர் தலைமையில் பரிசீலனை நடைபெற்று மக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

சட்டம் 1956 உட்பிரிவு ஒன்றின்படி எங்கெல்லாம் கோவிலுக்கு இருக்கின்றதோ அங்கெல்லாம் அறநிலையத்துறை தலையிடலாம் என்ற சட்டத்திற்கு உட்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் அமைச்சர் சேகர் பாபு.


தமிழகத்தில் நோய்த்தொற்று விரைவாக முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நோய் பரவல் நுழைந்தவுடன் விரைவாக கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் அமைச்சர் சேகர் பாபு.