ஊரடங்கு நீட்டிப்பா! விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

0
167

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை நாள் ஒன்றுக்கு 36 ஆயிரம் என்ற நிலையிலிருந்து தற்சமயம் 9 ஆயிரமாக குறைந்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார்.

இதன் காரணமாக, நோய்த்தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, போன்ற மாவட்டங்களில் நோய்த்தொற்றுகள் எண்ணிக்கையை தற்சமயம் வரையில் குறையவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே இந்த மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் கூடுதலான தளர்வுகளை அறிவித்திருக்கின்றது தமிழக அரசு. தற்சமயம் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது இந்த ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கின்றது.

இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவ வல்லுனர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஒரு தலை காதலால் ஏற்பட்ட விபரீதம்! சட்ட கல்லூரி மாணவர் செய்த கொடூரம்!
Next articleஅமைச்சர்கள் யார் யார்? ஜாதகத்தை கணித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!