மூளைச்சலவை செய்தவர்கள் கைது! போலீஸ் அதிரடி!
இப்போதுள்ள கொரோனா இரண்டாம் அலையின் கால கட்டத்தில் யார் உயிரோடு இருப்போம் யார் எவ்வளவு நாள் இருப்போம் என்றே தெரியாத நிலையில், அனைவரும் நன்றாக இருப்போம் என்பதை விட்டு, சிலர் பணத்திற்காக மத மாற்றம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அனைத்து தெய்வங்களும், ஒன்றயே சொல்கின்றன. அனைவரிடமும் அன்பை வெளிபடுத்துங்கள், இருப்பதை பகிருங்கள், ஒற்றுமையாக இருங்கள் என்பதையே அனைத்து மதமும் போதிக்கின்றன. ஆனால் சில மத போதகர்களின் தவறான வழி காட்டுதலால், மக்கள் அறிவை இழந்து தவறான செயல்களை செய்கின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், நொய்டாவில் 1000 க்கும் மேற்பட்டவர்களை தங்கள் மதத்திற்கு மாற வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக இருவரை உத்தரப்பிரதேச போலீசார், தேசிய தலைநகரில் வைத்து கைது செய்துள்ளனர். ஆதாரங்களின்படி, இந்த இரண்டு நபர்களும் சுமார் 1000 முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாமிற்கு மாற்றுமாறு கட்டாயப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், அவர் ஜாமியா நகரில் உள்ள பட்டாலா வீட்டில் வசிப்பவர் என்றும் அவரே தனது மதத்தை மாற்றிக் கொண்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
இது குறித்து உத்தரப்பிரதேச மாநில சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி பிரசாந்த் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறும் போது, மக்கள் தங்கள் மதத்தை இஸ்லாத்திற்கு மாற்றும்படி கட்டாயப்படுத்தி மாநிலத்தில் ஒரு மோசடி நடந்து வருவதாகவும், டெல்லியைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறி உள்ளார். இதுவரை சுமார் 1000 பேரை அவர்கள் மதத்திற்கு மாற்றியுள்ளதாக ஏ.டி.ஜி பிரசாந்த் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த இரண்டு நபர்களும் ஏழைக் குடும்பங்கள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் ஊனமுற்றோர், குறிப்பாக செவிப்புலன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள குழந்தைகளை இந்த விசயத்தில் குறிவைக்கப் பயன்படுத்துகிறார்கள் என்றும், தங்கள் மதத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தினார்கள் என்றும் ஏ.டி.ஜி பிரசாந்த் குமார் கூறியுள்ளார். இவர்கள் பணம் தருவதாக கூறி மக்களை தங்கள் மதத்திற்கு மாறவேண்டும் என்று கூறி அவர்களை இவர்கள் பக்கம் ஈர்த்துள்ளனர். மத மாற்றங்களுக்கு ஐ.எஸ்.ஐ.யின் நிதியுதவி பெரும் பங்காக இருக்கலாம் என்றும் உ.பி.யின் ஏ.டி.ஜி கூறியுள்ளார்.
மேலும் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பிரசாந்த் குமார் பல பெண்கள் தங்கள் மதத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், மேலும் அவர்கள் திருமணமும் செய்து கொண்டனர் என்று கூறினார். நொய்டா, கான்பூர் மற்றும் மாத்தூர் ஆகிய இடங்களில் இந்த மோசடி தொடர்ந்து நடந்து வருவதாகவும் பிரசாந்த் குமார் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் இஸ்லாமிய தாவா மையம் என்ற பெயரில் ஒரு மையத்தை நடத்தி வருகிறார், அது உலகம் முழுவதிலுமிருந்து நிதியுதவி பெற்று நடத்தப்படுகிறது. இந்த மோசடியில் சிக்கியவர்களையும் காவல்துறை கண்காணித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.