மாணவி தூக்கில் தொங்கிய நிலையில், தந்தையும் உயிரிழந்தார்!

0
140
While the student was hanging, the father also died!
While the student was hanging, the father also died!

மாணவி தூக்கில் தொங்கிய நிலையில், தந்தையும் உயிரிழந்தார்!

இப்போது உள்ள பிள்ளைகளுக்கு மனஉறுதி என்பது சிறிதும் இல்லை. வீட்டில் ஏற்படும் சிறு சிறு விசயங்களுக்கெல்லாம் உயிரை விடும் அளவுக்கு சென்றால் வாழ்க்கையில் இன்னும் மிக பெரிய சவால்களை எப்படி சமாளிப்பார்கள்.

கல்லூரியில் சேர ஏற்படும் சிறு விசயத்திற்காக ஒரு பெண் உயிரை மிது கொண்டு உள்ளாள். இந்த செய்தி அதை பற்றி தான் சொல்கிறது. வாருங்கள் பார்க்கலாம்.

மண்டியா மாவட்டத்தில், மலவள்ளி தாலுகாவில், தளகவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 65). இவரது மகள் பந்தவ்யா (17). இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் சமீபத்தில் சேர்ந்துள்ளார். கல்லூரி சேர்க்கை விவகாரம் தொடர்பாக தந்தை மற்றும் மகளுக்கு இடையே சிறு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த தகராறு நேற்று முன்தினம் இரவும் தொடர்ந்து நடந்ததாக கூறுகிறார்கள்.

இதனால் பந்தவ்யா வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது படுக்கை அறைக்கு சென்ற பந்தவ்யா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்துள்ளார்.

நேற்று காலை தனது மகள் அறைக்கு சென்ற ராஜூ, மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பந்தவ்யாவின் உடலை கட்டிப்பிடித்து ராஜூ கதறி அழுதபடி இருந்துள்ளார்.

அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மலவள்ளியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மலவள்ளி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தற்கொலை செய்த பந்தவ்யா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மலவள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸ் விசாரணையில், கல்லூரி சேர்க்கை தொடர்பாக தந்தை, மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதில் மனம் உடைந்த பந்தவ்யா தற்கொலை செய்ததும், இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் ராஜூ உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதுபற்றி மலவள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து அந்தப் பகுதியில் விஷயம் கேள்விப்பட்டு அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleஓவர்டைம் பார்ப்பவரா நீங்கள்? உங்களுக்கு பயனுள்ள செய்தி! மத்திய அரசு செயலாக்கும் திட்டம்!
Next articleஅரசு பேருந்துகளில் பெண்களை போல இனி இவர்களுக்கும் இலவச பயணம்! தமிழக அரசு அறிவிப்பு