லிவிங் டூகெதர் வாழ்ந்த நிலையில் கைது செய்த போலீசார்! மைனர் பெண் கொடுத்த வழக்கு!

0
114
Police arrested while living together! The case given by the minor girl!
Police arrested while living together! The case given by the minor girl!

லிவிங் டூகெதர் வாழ்ந்த நிலையில் கைது செய்த போலீசார்! மைனர் பெண் கொடுத்த வழக்கு!

பிள்ளைகள் அதீத வளர்ச்சி அடைந்து விட்டனர். அவர்களுக்கு தோணுவதை அவர்களின் இஸ்டத்திற்கு செய்து கொள்கிறார்கள். கடைசி வரை வாழும் வாழ்க்கை உட்பட. தற்போதைய நிலைமை சரி என்றால் போதும் என்று பார்கிறார்களே தவிர பின்னாளில் வரும் கஷ்டங்களையோ, வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும் என்பது பற்றியோ அவர்கள் யோசிப்பதே இல்லை.

அப்படி ஒரு வழக்கு மும்பையில் நடைபெற்று உள்ளது. 14 வயதே ஆன சிறுமி ஒரு நபர் இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விஷயம் இருவரது பெற்றோர்களுக்கு தெரிவித்த நிலையில், இருவரும் சேர்ந்து லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்துள்ளனர்.

மேலும் அந்த சிறுமி தனது பெற்றோரை விட்டுவிட்டு வந்து அந்த நபரை  திருமணமும் செய்துள்ளார். இருப்பினும், அவரது காதலன் அவரை கற்பழித்து விட்டதாக இந்த சிறுமி ஒரு வழக்கு பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, நீதிமன்றத்தில் பேசிய வக்கீல் இருவரும் ஒன்றாக வாழ்ந்தவர்கள், மற்றும் திருமணமானவர்கள், இதனால் ஒருமித்த உறவிலும் இருந்தனர்.

மேலும் பீட்டர் பான் மற்றும் பாதிக்கப்பட்டவர் இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் மற்றும் காதலித்து வந்தவர்கள். பாதிக்கப்பட்டவர் மைனர் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும், இந்த சிறுமிக்கு போதுமான அறிவும் திறனும் இருந்தது. மேலும், சிறுமி தாமாக முன்வந்து தனது காதலனுடன் வாழ்ந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார்.

அந்த நபருக்கு ஆஜரான வக்கீல் சுனில் பாண்டே, பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 23 வயது இளைஞர் பீட்டர் பான் மன நோயால் பாதிக்கப் பட்டதாக கூறியுள்ளார். அதாவது அவரது உடல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அவரது மன வளர்ச்சி இல்லை என்றும் கூறினார்.

அதன் பின் சிறப்பு பொது வக்கீல் வீணா ஷெலார், இந்த சம்பவத்தின் பின்னர் நடத்தப்பட்ட அந்த நபரின் மருத்துவ பரிசோதனையின் மூலம்  எந்தவிதமான அசாதாரண அறிகுறிகளும் தெரியவில்லை என்றும், மேலும் எந்தவொரு மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பும் பீட்டர் பான் நோய் ஒரு நோயாக அங்கீகரிக்கவில்லை. எனவே நீதிமன்றம், ஜாமீன் மனுவை அனுமதிக்கும் போது, ​​குற்றப்பத்திரிகை மற்றும் பாதிக்கப்பட்டவரின் அறிக்கையை கவனத்தில் கொண்டதன் பேரில் இவ்வாறு சொன்னது. அதனை தொடர்ந்து, கற்பழித்ததாக கூறப்பட்ட அன்றில் இருந்து இரண்டு நாள் கழித்து, அவர் கைது செய்யப்பட்டார்.

Previous articleஅரசு பேருந்துகளில் பெண்களை போல இனி இவர்களுக்கும் இலவச பயணம்! தமிழக அரசு அறிவிப்பு
Next articleரீல் அறுந்துபோச்சு! என்ன இருந்தாலும் இப்படியா?